கையெழுத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பேனா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

கையெழுத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பேனா!

'நாலெட்ஜ் வொர்க்கர்' எனப்படும் அறிவு சார்ந்த பணியாளர்கள் மத்தியில் இப்போது குறிப்பெடுக்கும் வழக்கம், வைரஸ் போலப் பரவி வருகிறது. அதிலும், பேனா, பென்சிலால் கைப்பட குறிப்பெடுப்பதுதான் நினைவில் நிறுத்த மிகவும் உதவுவதாக கணிசமான வர்கள் கருதுகின்றனர்.

எனவே, கைப்பட எழுதுவதை, அப்படியே டிஜிட்டல் எழுத்துக்களாக மாற்றும் கருவிகளும் வரத் தொடங்கி யுள்ளன. அதில் சிறப்பு கவனத்தைப் பெற்றுவருகிறது 'நுவா பென்' (Nuwa Pen)என்ற டிஜிட்டல் பேனா.

நெதர்லாந்தைச் சேர்ந்த 'நுவா'வின் ஆராய்ச்சியாளர்கள், எந்தக் காகிதத் தில் எழுதினாலும், எழுத்தை புரிந்து கொண்டு, டிஜிட்டல் கோப்பாக மாற்றித் தருகிறது.

இதற்கு உதவும் வகையில், மூன்று குட்டிக் கேமிராக்கள், அசைவு மற்றும் அழுத்தத்தை உணரும் உணரிகள், மங்கலான வெளிச்சத்தில் கேமிராக் களுக்கு உதவ, கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்பு எல்.இ.டி., விளக்கு ஆகி யவை பேனாவிலேயே பொருத்தப்பட் டுள்ளன. கேமிராக்களும் உணரிகளும் சேகரிக்கும் தகவலை, ஒரு அலைபேசி செயலிக்கு அனுப்ப, அங்கே கையெ ழுத்து டிஜிட்டலாக மாறுகிறது.

No comments:

Post a Comment