பொதுத்துறையை சேர்ந்த பிரத்யேக சரக்கு வழித்தட நிறுவனத்தில் (டி.எப்.சி.சி.அய்.,) காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
காலியிடம் : எக்சிகியூட்டிவ் பிரிவில் 354 (சிவில் 50, எலக்ட்ரிக்கல் 30, ஆப்பரேஷன் பிசினஸ் டெவ லப்மென்ட் 235 நிதி 14, எச்.ஆர்., 19, அய்.டி., 6) , ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 181 (எலக்ட்ரிக்கல் 24, சிக்னல் டெலிகம்யூனிகேசன் 148, மெக்கானிக்கல் 9) என மொத்தம் 535 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு டிப்ளமோ, ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவுக்கு அய்.டி. அய்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2023 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண் டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : இணைய வழி எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பு
தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 19.6.2023
விவரங்களுக்கு : https://dfccil.com
No comments:
Post a Comment