காரைக்காலையடுத்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில். சனி தோஷத்தைக் கழிக்க இங்கே பக்தர்கள் வருவதுண்டு. இந்தக் கோவிலைப்பற்றி விதம் விதமாக, வண்ண வண்ணமாகக் கயிறு திரித்து தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர். ‘‘ஏழரை நாட்டு சனி பிடித்துவிட்டது, அதனால் பெரும் கஷ்டங்கள் வரும். இந்த சனீஸ்வரன் கோவிலுக்கு வந்து சடங்குகள் செய்து, குளத்தில் குளித்தால் தோஷம் போகும்'' என்பது கொழுப்பெடுத்த மூடநம்பிக்கை.
ஆனால், என்ன நடந்தது?
அந்த சனீஸ்வர பகவான் கோவில் அர்ச்சகர் ரோகினி (வயது 60) வீட்டிலேயேஒன்பதரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளைப் போயிற்று.
அந்தோ பரிதாபம்!
அன்றாடம் சனிபகவானுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகருக்கே சனி பகவான் தன் ‘திருமுகத்தை'க் காட்டவில்லையே!
No comments:
Post a Comment