தமிழ்-சமஸ்கிருதம்-இவற்றில் பழைமையான மொழி எது? தீர்வு எட்டப்படவில்லையாம் சர்ச்சையைக் கிளப்புகிறார் ஆளுநர் ரவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

தமிழ்-சமஸ்கிருதம்-இவற்றில் பழைமையான மொழி எது? தீர்வு எட்டப்படவில்லையாம் சர்ச்சையைக் கிளப்புகிறார் ஆளுநர் ரவி

சென்னை, மே 14- கிண்டி ராஜ்பவனில் 12.5.2023 அன்று யுவ சங்கம் என்ற தலைப்பில் பீகார் மாநில மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- நான் பிறந்து வளர்ந்த மாநிலம் பீகார். தமிழ்நாட்டிற்கு வந்த ஒன் றரை ஆண்டுகளில் நான் தினம் தினம் ஒன்றை கற்றுக் கொண்டி ருக்கிறேன்.

தமிழ்நாடு சிறந்த மாநிலம். தமிழ், உலகின் சிறந்த மொழி. உலகின் பழைமையான மொழிகள் சமஸ்கிருதம், தமிழ் ஆகும். இவற் றில் எது பழைமையான மொழி என்பதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.  சமஸ்கிரு தத்தில் இருந்து பல வார்தைகள் தமிழ் மொழிக்கும், தமிழில் இருந்து பல வார்த்தைகள் சமஸ்கிரு தத்திற்கும் சென் றுள்ளன.

இரண்டு மொழிகளும் சமமாக உள்ளன. மாணவர்கள், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான திருக் குறளை கற்க வேண்டும். இதில் இருந்து தமிழ் மொழி எவ்வளவு சிறந்தது என்பதை அறியலாம். பாரதம் 1947ஆம் ஆண்டில் உருவாக்கப்படவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகள் பழை மையானது பாரதம். இந்த நாட்டை ராஜாக்களும், ஆட்சியா ளர்களும் எந்த பாகுபலியும் உருவாக்கவில்லை. பாரதம், ரிஷிக் களால் உருவாக்கப்பட்டது. பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கல்விக்காகவும், குடியேறவும் பயணிக்கத் தொடங் கினர்.

இதில், எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. நூறு ஆண்டு களுக்கு முன்பு 40 ஆயிரம் தமிழர்கள் காசிக்கு சென்றனர். சவுராஷ்டிராவை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தனர். நாட்டில் பல ராஜாக்கள் இருக் கலாம் ஆனால், மக்கள் ஒன்றுதான். 

அந்த கால கட்டத்தில் மொழி கள் யாருக்கும் தடையாக இருந்த தில்லை. என் தாயும், பாட்டியும்கூட பாட்னாவில் இருந்து ராமேசு வரத்துக்கு பயணம் மேற்கொண்டனர். 

வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கும், ராமேசுவரத்துக்கும் செல்ல வேண்டும் என்று நினைத்து பயணித்தனர். இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment