சொல்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவின் கணவர் பொருளாதார நிபுணர் சீதாராமன்!
சென்னை, மே 18 அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டிற்குப் பேரிடர் ஏற்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி வைரலாகி வருகிறது.
அது குறித்த செய்தி வருமாறு:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டுக்குப் பேரிடர் என பொருளாதார வல்லுநரும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கண வருமான பரகலா பிரபாகர் விமர்சித் துள்ளார்.
அவர் எழுதிய “The Crooked Timber of New India - Essays on a Republic in Crisis” – என்ற புத்தகம் பெங்களூருவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வளர்ச்சி, தூய்மையான நிர்வாகம் என்ற பெயரால் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு அதனை கைவிட்டு, ஹிந்துத்துவா ஆதிக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment