இணையத்தில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சென்னை, மே 12- தமிழ்நாடு வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் நேற்று முன்தினம் (10.5.2023) தொடங் கியது.
கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத் தின்கீழ் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் 14 பிரிவுகளில் இளநிலை பட்டப் படிப்புகள், 3 பிரிவுகளில் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய லலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 6 பாடப் பிரிவுகளில் இளநிலை பட்டப் படிப்புகள், 3 பிரிவுகளின் கீழ் தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளும் வழங்கப்படு கின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் மீன்வளப் பல் கலைக்கழகங்களில் 2023_-2024ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பப் பதிவை தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி இணையதளத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 18 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகளில் இள நிலை அறிவியல் பிரிவில் 12 பாடப் பிரிவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நடப்பு ஆண்டு உயிரித் தகவலியல், வேளாண்மை தகவல் தொழில் நுட் பம் ஆகிய இரண்டு பாடப் பிரிவுகள் புதிதாக அறிமுகப் படுத்தப்பட் டுள்ளன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 உறுப்புக் கல்லூரிகளில் 3,363 இடங்கள், 28 இணைப்பு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 2,806 இடங்கள் என மொத்தமாக அரசு ஒதுக்கீட்டின் கீழ் 6,169 இடங்கள் நிரப்பப்பட வுள்ளன. 2023_-2024ஆம் கல்வி யாண்டுக்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
இணையதளத்தில் பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பத்தை விண் ணப்பக் கட்டணத்துடன் சமர்ப் பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை ஜூன் 9 ஆம் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுப் பிரிவு, பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மாணவர் களுக்கு ரூ.500, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் களுக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
விண்ணப்பப் பதிவு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இணையதளம் வழியாக மட்டுமே மேற்கொள்ளப் படும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பாடப் பிரிவுகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 0422 -6611345, 6611346, 94886 35077, 94864 25076 ஆகிய எண்களிலும், மீன்வளப் பட்டப் படிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 04365-256430, 94426 01908 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ள லாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இரு பல்கலைக்கழகங்களுக்கும்
ஒரே விண்ணப்ப நடைமுறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 பாடப்பிரிவுகளுக்கு தனியாகவும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள 6 பாடப் பிரிவுகளுக்கு தனித் தனியாகவும் மாணவர்கள் விண் ணப்பித்து வந்தனர்.
இதனால், மாணவர்கள் ஒவ் வொரு விண்ணப்பத்திற்கும் தனித் தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி வேளாண்மை, மீன் வளப் பல்கலைக்கழகத்தில் ஒரே விண்ணப்பம் அளிக்கும் நடை முறை அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இதனால், மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமிருக்காது.
வேளாண்மை, மீன்வளப் பல்கலைக்கழகங்களின் பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு அடிப் படை தகுதிகள் ஒரே விதமாக இருப்பதால் விண்ணப்ப பதிவு நடைமுறைகள் இணைக்கப்பட் டுள்ளன.
முற்றிலும் மாணவர்களின் நலன் கருதியே ஒரே விண்ணப்பம் என்ற நடைமுறை அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. வேறெந்த காரண மும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment