சென்னை, மே 7 - சென்னையில் கோவிலுக்கு பாட் டியுடன் சென்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை கொருக்குப் பேட் டையை சேர்ந்த கவின் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பாட்டியுடன் சித்திரை முழுநிலவை முன்னிட்டு கோயிலுக்கு சென்றுள்ளான்.
அப்போது கூட்ட நெரிசலால் அலங்கார விளக்குகாக அமைக்கப் பட்டிருந்த மரக்கட் டையை பிடித்த போது ஒயரில் மின்சாரம் கசிந்து சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சிறுவனின் தாய் கதறி அழும் காணொலி காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
No comments:
Post a Comment