தொழில்நுட்ப கல்விச் சேவையில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

தொழில்நுட்ப கல்விச் சேவையில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி


‘பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியாரின் நூற்றாண்டு பிறந்த நாளைக்  குறிக்கும் விதமாக தமிழர் தலைவர் டாக்டர். கி. வீரமணி அவர்களின் சீரிய முயற்சியால் 1980ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் என்ற சிற்றூரில் கிராமப்புற மகளிருக்காக பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் மூன்று பாடப்பிரிவுகளுடன் துவக்கப்பட்டது.  பின்பு 2002ஆம் ஆண்டு மாணவர்களும் அனுமதிக்கப்பட்டு இருபாலரும்  இணைந்து கல்வி பயிலும் நிறுவனமாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின்  (AICTE)  அங்கீகாரம் பெற்று தன்னாட்சி அந்தஸ்துடன்(Autonomous Status)  கீழ்கண்ட பாடப்பிரிவுகளுடன் இயங்கி வருகின்றது.

« கட்டட எழிற்கலையியல் (Architectural Assistantship)

« மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் 

(Electronics and Communication Engineering)

« மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ்  (Modern Office Practice)

« இயந்திரவியல்   (Mechanical Engineering)

« மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பியல் 

(Electrical and Electronics  Engineering)

« கட்டடவியல்  (Civil Engineering)

« கணினியியல் (Computer Engineering)

விருதுகள் 

இக்கல்லூரியின் சிறப்பான  செயல்பாடுகளுக்காக கனடா அரசின் முதல் பன்னாட்டு சாதனை விருது (Canada – Award of Excellence) தமிழ்நாட்டிலேயே சிறந்த பாலிடெக்னிக் விருது(Tamil Nadu Government Best Polytechnic Award)    மற்றும் இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக விருதுகள், நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள், தேசிய மாணவர் படை விருது கள் போன்ற பெருமை மிகு விருதுகளைப் பெற்றுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம்(ISTE) 

மாணவ-மாணவிகள் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், தொழில் நுட்பக் கட்டுரைகளை தயாரித்து அவற்றை மாநில அளவில் நடைபெறும் கருத்தரங்குகளில்  வாசித்தளிக்கவும் (Paper Presentation) இக்கல்லூரியில் இயங்கும் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (Indian Society for Technical Education)  மற்றும் இந்திய பொறியாளர் கூட்டமைப்பு   (Institution of Engineers (India) ஆகியவை வழிவகை செய்கின்றன.

பெரியார் அறிவியல் கழகம் (Periyar Science Club) 

இக்கல்லூரியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் துவக்கப்பட்ட பெரியார் அறி வியல் கழகம்   (Periyar Science Club) வாயிலாக ஆண்டு தோறும் நடத்தப்படும் பெரியார் தொழில்நுட்பக் கருத்தரங்கு  (Periyar Techno Meet)  மாணவ-மாணவியரின் அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அறிவை மேம்படுத்துவதில்  சிறப்பான பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையா காது.

தொடர்கல்வி திட்டம் (Continuing Education Programme)

இக்கல்லூரியில் இயங்கும் தொடர்கல்வி திட்டம் (Continuing Education Programme) வாயிலாக நவீன தொழில்நுட்பங்கள் செறிந்த பாடங்கள் கூடுதலாக கற்பிக்கப் படுகின்றன.  மேலும், இக்கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டம்(NSS),  தேசிய மாணவர் படை  (NCC),  ஆகியவை மாணவ-மாணவிகளின் தலைமைப் பண்பு மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது.

மேனாள் மாணவர்கள் சங்கம்  (Alumni Association)

இக்கல்லூரியில் பயின்று இப்போது பல்வேறு நிறுவனங் களில் உயர் பதிவிகளை வகித்து வரும் மேனாள் மாணவ-மாணவிகள் ஆண்டுதோறும்  நடைபெறும் மேனாள் மாணவர்கள் சங்கக் கூட்டத்திற்கு (Alumni Association Meetings) வருகை தந்து தங்களின் ஆலோசனைகள் மூலம் கல்லூரி  வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறார்கள்.

மகளிர் மேம்பாட்டு அமைப்பு  (Women in Development Cell)

தந்தை பெரியாரின் மகளிர் முன்னேற்றச் சிந்தனைகளின் வடிவமாக இக்கல்லூரியில் செயல்படும் மகளிர் மேம்பாட்டு அமைப்பு (Women in Development Cell) கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளித்து பெண்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வையும் தெளிவையும் வழங்குகின்றது.

தொழிலக பயிலக இணைப்புத்திட்டம்  ((III))

இக்கல்லூரியில் பயிலும் மூன்றாமாண்டு மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து புகழ்பெற்ற நிறுவனங்களில் அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் உன்னத பணியினை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (Placement and Training Cell) செவ்வனே செய்து வருகின்றது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU)

பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந் தங்கள்(MOU)
 வாயிலாக தொழிற்சாலை வல்லுநர்களின் விருந்தினர் உரை மற்றும் தொழில்நுட்பப் பறிமாற்றம் ஆகிய ஆக்கப்பூர்வ செயல்பாடுகளின் வாயிலாக மாணவ-மாணவிகளின் தொழில்நுட்பத் திறன் மேம்படுகின்றது.

வாழ்க்கை வழிகாட்டும் திட்டம் (Career Guidance Programme)

டிப்ளமோ இறுதியாண்டு பயிலும் மாணவ-மாணவி களின் மென்திறன் (Soft Skills) - நேர மேலாண்மை, தலைமைப் பண்பு மேம்பாடு, மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை, நாகரிக நடத்தைகள் மற்றும் பண்பாடுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு மாணவ மாணவிகள் தங்கள் பணி இடத்திலும் சமூக வாழ்க்கையிலும் சிறந்து விளங்க பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

விருந்தினர் உரை (Guest Lectures)

கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சாலை வல்லுநர்களை அழைத்து ஏற்பாடு செய்யப்படும் விருந்தினர் உரைகள் (Guest Lectures)
மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப திறனையும் (Technical Skills) புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அறிவையும் மேம்படுத்துகிறது.

தொழிற்சாலை பார்வையிடல் (Industrial Visit)

தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிடுவதன் வாயிலாக மாணவ-மாணவியர் தாங்கள் பெற்ற வகுப்பறைக் கல்வியின் தொழில் நுட்பத்தை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ள முடிகின்றது.

தொழில் இடைப்பயிற்சி (Internship Training)

பருவ முறைத் தேர்வுகள் விடுமுறையில் மாணவ-மாணவிகள் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சென்று இரு வாரங்கள் பணிபுரிவதன் மூலம் இயந்திரங்களின் செயல் திறன் பற்றி அறிந்து கொள்வதோடு சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரோடு எவ்வாறு கலந்து பழகுதல் போன்ற பண்புகள் பெறுகின்றார்கள்.

தொழில் முனைவோர் மேலாண்மை  மேம்பாட்டுத் திட்டம் (EMDP)

கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் வேலைக்கு முயல்வதால் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டம் எனும் சமூகப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக இக்கல்லூரியில் இயங்கும் தொழில் முனைவோர் மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு தொழில் முனை வோர் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் வாயிலாக நடை பெறும் பயிற்சிகள் தொழில் துவங்கும் மனப்பாங்கை உருவாக்குகின்றன.

தொழிற்சாலை வல்லுநர்களின் பயிற்சி (Course Work by Industries)

தொழிற்சாலை வல்லுநர்களை கல்லூரிக்கு நேரடியாக அழைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மாணவர்களின் தொழில்நுட்பத்திறன் மேம்பாடு அடைவ தோடு தொழிற்சாலை பணிகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பை உருவாக்குகிறது.

தேசிய அங்கீகாரம்  (NBA Accreditation)  

இப்பாலிடெக்னிக் கல்லூரியின் பன்னாட்டு தரத்திலான கற்றல், கற்பித்தல் செயல்முறைகள், பாலி டெக்னிக்கின் கல்விசார் நடைமுறைகள் ஆகிய கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளை  ஆய்வு செய்த தேசிய அங்கீகார வாரியம் (National Board of Accreditation)  மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் (ECE), கணினியியல் (CT), இயந்திரவியல் (MECH),  மின்னியல் மற்றும் மின்னணுவியல்(EEE) ஆகிய துறைகளுக்கு தேசிய அங்கீகாரம் (NBA Accreditation Status)வழங்கியது. இப் பெருமை மிகு அங்கீகாரம் இக்  கல்லூரியின் சாதனைப் பயணத்தில் சிறந்த மைல்கல் என்றால் அது மிகையல்ல. 

வேலை வாய்ப்பு  (Placement)

இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுள் உயர்கல்வி(Higher Studies) மற்றும் தொழில் முனைவோர்(Entrepreneur) தவிர்த்து வேலைக்கு செல்ல விரும்பும் அனைத்து மாணவ-மாணவியருக்கும் நேர்முகத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது (Interview Techniques)   பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  மேலும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இப்பாலிடெக்னிக்கில் நடத்தப் படும் வளாக நேர்காணல்  (On Campus Interview)    மற்றும் மற்ற கல்லூரிகளில் நடைபெறும் வளாக நேர்காணல்  (Off Campus Interview)  ஆகியவற்றின் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் 100 % வேலை வாய்ப்பு உறுதி செய்யப் படுகின்றது. 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத் தடுத்து  3 பொதுத் தேர்வுகள எழுத சிரமப்படுவதாலும், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தால் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ப தாலும் +2 படிப்பை தவிர்த்து பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பில் ஆர்வம் காட்டு கின்றார்கள்.  மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய புகழ் பெற்ற நிறுவனங்கள்

« அப்பல்லோ டயர்ஸ், சென்னை

Apollo Tyres, Chennai


« ராயல் என்பீல்டு, சென்னை

RE Academy, Chennai


« எல் அண்ட் டி, கோயம்புத்தூர்

L& T, Coimbatore


« டிவிஎஸ் சுந்தரம் பிரேக் லைனிங்ஸ், விருதுநகர்

TVS Sundaram Brake Linings, Virudhunagar


« ரானே மெட்ராஸ், பாண்டிச்சேரி

RANE AUTOMOTIVE, CHENNAI


« அகூஸ்டிக்ஸ், திருச்சி

ACOUSTICS, TRICHY

 

« ரானே ஆட்டோமோட்டிவ், சென்னை

RANE AUTOMOTIVE, CHENNAI


« செயின்ட் கோபெய்ன். சென்னை

SAINT GOBAIN, CHENNAI


« கல்ச்சி கண்ட்ரோல், திருச்சி

KALCHI  CONTROL, TRICHY


« எஸ்.கே. எண்டர்பிரைசஸ்

S.K. Enterprises, Chennai


« டிவிஎஸ்டிஎஸ், சென்னை

TVS-TS, Chennai


« இண்டகிரேட்டட் பெர்சனல் சர்வீஸ், சென்னை

Integrated Personnel Service, Chennai

« சல்காம்ப், சென்னை

         SALCOMP, Chennai                

« லூகாஸ் டி.வி.எஸ், புதுச்சேரி

        (Lucas TVS, Pondicherry)

« செயிண்ட் கோபெய்ன், சென்னை

SAINT GOBAIN, CHENNAI


« லார்சன் அண்டு டூப்ரோ, கோயம்புத்தூர்

(Larsen & Turbo, Coimbatore)


« ராயல் என்பீல்டு அகாடமி, சென்னை

(R.E. Academy, Chennai)


« ரானே பிரேக்ஸ் லைனிங் பிரைவேட் லிமிடெட்

(Rane Brakes Lining Pvt. Ltd, Chennai)


« நோக்கியா சொல்யூஷன் டெக்னாலஜீஸ்

(Nokia Solutions Technologies, Chennai)

கடந்த ஆண்டு நடைபெற்ற வளாக நேர்காணலில் 686க்கு மேற்பட்ட பணி ஆணைகளை (Offer Letters) பெற்ற 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இக் கல்லூரியில் படித்து வேலை வாய்ப்பு பெற்ற மாணவ-மாணவிகள் இன்று பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிவதோடு வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைந்திருக் கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment