துணைத்தேர்வு
பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதி தோல்வி அடைந்த மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வு எழுதுவதற்கு மே 11 முதல் 17ஆம் தேதி வரை, 14ஆம் தேதியை தவிர மற்ற நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவரவர் படித்த பள்ளி களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விசாரணை
நாகர்கோவில் நேசமணி நகரில் கரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த குடும்பத்தினரிடம் சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை.
அனுப்பி வைப்பு
சூடான் நாட்டில் இருந்து இதுவரை மீட்டு வரப்பட்ட 247 தமிழர்கள் மாநில அரசின் ஏற்பாட்டில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை
சில்லறை விற்பனைக் கடைகளில் மக்களுக்கு தடை யின்றி பருப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்.
நீட்டிப்பு
கருநாடகத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து கருநாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உச்சநீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவு.
தொடக்கம்
சூரியன் மற்றும் நிலவை நோக்கிய இஸ்ரோவின் ஆராய்ச்சிப் பணிகள் வருகிற ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.
மரக்கன்று
சுவிக்கி, சோமொட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலமாக பொது மக்களுக்கு மரக் கன்று களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தகவல்.
தொழிலாளர்களுக்கு...
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளர்கள் வசதிக்காக அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தகவல்
தமிழ்நாட்டில் முதல் முறையாக விபத்து, அடிதடியில் சிகிச்சைக்கு வருவோர் குறித்து மருத்துவமனையில இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க ‘மொபைல் ஆப்' கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
திருத்தம்
ஒரே பாலின திருமணம் தொடாபாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment