பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது

திருச்சி, மே 25- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. இராஜகோபாலன் சென்னை மெரினா லேப்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு நிறுவனத்திடமி ருந்து 2022ஆம் ஆண்டிற் கான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். 

விருது பெற்ற முனை வர் இரா. இராஜகோபா லனை கல்லூரியின் நிர் வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை மற்றும் பேராசிரி யர்கள் பாராட்டி, வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

இவர் மருந்தியல் துறையில் காப்புரிமை பெறுதல் மற்றும் ஆய்வி தழ்களில் பல ஆராய்ச் சிக்கட்டுரைகளை வெளியிடுதல் போன்ற ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். 

இவரது ஆராய்ச்சிப் பணியை பாராட்டி இவ் விருது கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment