கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, மே 24 - கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ( 23- 5 -2023) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலை மையில் நடைபெற்றது.

இக்கூட்டம் கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த. அறிவர சன் ,செயலாளர் கா. மாணிக் கம், துணைத் தலைவர் வ. ஆறு முகம், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கிருட்டினகிரி நகர தலைவர் கோ. தங்கராசன் அனைவரை யும் வரவேற்று பேசினார். 

தலைமைக் கழக ஒருங் கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் வழிகாட்டு தல் சிறப்பு உரையாற்றினார். அதில் வருகிற 30-ஆம் தேதி கிருட்டினகிரி நகரில் பெரியார் மய்யம் , தந்தை பெரியார் சிலை திறப்பு, படிப்பகம் திறப்பு  முப் பெரும் விழாவை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பதை பற்றியும் ,ஒவ்வொரு கழகத் தோழர்களும் எவ்வாறு தனித்தனியாக வேலைகளை பிரித்து ஒவ்வொரு பணியையும் சிறப்பாக செய்வது என்பதை ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் பற்றியும், விரிவாக எடுத்து கூறினார். 

மேலும் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பு பற்றியும், தாங்கள் விழாவில் பங்கேற்று சிறப்பாக செய்வது பற்றியும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர்.அதில்

காவேரிப்பட்டினம் ஒன்றிய கழகத்தின் சார்பில் ரூ.50,000, மத்தூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் ரூ50,000, ஊற்றங்கரை ஒன்றிய கழகத் தின் சார்பில் 50,000, பர்கூர் ஒன்றிய களத்தில் சார்பில் 50,000   மாவட்ட பகுத்தறிவா ளர் கழகம் சார்பில் 50 000 மாவட்ட மகளிர் அணியின் சார்பில் ரூ.10,000 வழங்குவதா கவும் ஒவ்வொரு பொறுப்பா ளர்களும் உறுதியளித்துள்ள னர்.

இறுதியாக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன் தலைமை உரையாற்றி னார். அதில் கிருட்டினகிரியில் நடைபெறும் முப்பெரும் விழாவை ஒவ்வொரு ஒன்றிய கழகத்தின் சார்பிலும் ஒவ் வொரு பகுதியிலும்  விழாவை பற்றி தமிழர் தலைவர் ஆசிரி யரை வரவேற்பு பதாகைகள் உடனடியாக வைப்பது பற்றி யும் ,விளம்பரங்கள் செய்வது பற்றியும் ,நன்கொடை திரட்டு வது பற்றியும் விழா சிறக்க பொதுமக்களை திரட்டி விழாவை எவ்வாறு சிறப்பாக நடத்துவது பற்றியும், விரிவாக எடுத்துக் கூறினார்.

மேலும் ஈரோடு பொதுக் குழுவில் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களால் தலை மைக் கழக மாநில ஒருங்கி ணைப்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள ஒரத்தநாடு இரா. குணசேகரன் ,தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச் செல்வி ,ஆகியோருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.

கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.கிருஷ்ணன் பெரியார் மய் யத்திற்கு நன்கொடை வசூ லித்து 38 சேர்  வழங்கியதற்காக தலைமைக் கழக கழகத்தின் சார்பில் ஒரத்தநாடு குண சேகரனும், ,ஊமை. ஜெயரா மனும் இணைந்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1.

பெண்டறள்ளி மாதையன் (எ)செங்குட்டுவனின் தாயார் இராஜாத்தி அம்மாள் ,ஆத் தூர் ஒன்றிய மேனாள் செய லாளர் மு. ஜெயரட்சகனின் தாயார் உண்ணாமலை கழக மேனாள் தலைமைச் செயற் குழு உறுப்பினர் காவேரிப் பட்டினம் தா. திருப்பதியின் மகன் மருத்துவர் வள்ளல் ஆகி யோர் மறைவிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தையும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங் கலையும் தெரிவித்துக் கொள்கி றது.

தீர்மானம் 2

ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத் தின் அனைத்து தீர்மானங்க ளையும் செயல் படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3

30-5-2023அன்று மாலை கிருட்டினகிரி கார்னேசன்  திடலில் பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை திறப்பு, நூல கம் திறப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவினை மிகுந்த எழுச்சியோடு நடத்து வது என இக்கூட்டம் தீர்மா னிக்கிறது.

தீர்மானம் 4

30/5/2023 அன்று கிருட் டினகிரி நகரில் பெரியார் சுய மரியாதை பிரச்சாரம் நிறு வனம் சார்பில் அமைக்கப் பட்டுள்ள பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை திறப் பதற்கு நன்கொடை அளித்து, ஊக்கப்படுத்திய பெருந்தகை யாளர்கள் அனைவரையும் மற்றும் இனமான, உணர்வு மிக்க, தமிழின பெருமக்களை யும் விழா சிறக்க, வருகை தந்து சிறப்பிக்குமாறு விழாக் குழு வின் சார்பில் அன்போடு இக் கூட்டம் அழைத்து மகிழ்கிறது.

கூட்டத்தில் பங்கேற்றோர்:

மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர் மாரி .கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச. கிருஷ்ணன், செயலாளர் அ. வெங்கடாசலம், துணைச் செயலாளர் மு .வேடியப்பன் ,ஓசூர் பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், கிருட்டினகிரி ஒன்றிய தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம் ,மேனாள் ஒன்றிய தலைவர் சி. சீனிவாசன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் கி. முருகேசன், கிருட்டினகிரி நகர மாணவர் அணி தலைவர் திலக் ,மாணவர் கழக செ. கலையரசி ,மேனாள் மாவட்ட இளைஞரணி தலை வர் இல. ஆறுமுகம் ,மாவட்ட இளைஞரணி துணைச் செய லாளர் ஆ.கோ. ராஜா தஞ்சை முனைவர் கி. சவுந்தரராஜன் ,தஞ்சை நகர செயலாளர் டேவிட் ,பெரியார் பிஞ்சு ச.கு. மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இறுதியாக பொதுக்குழு உறுப்பினர் ம. ஜான்சி ராணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment