சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பைலான் என்ற நகரத்தில் நீட் தேர்வு எழுதும் முன்பு ஏற்பட்ட மன அழுத்தம் காரண மாக 22 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
இவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். இரண்டு முறையும் இவர் குறைவான மதிப்பெண் பெற்றதால் இம்முறை அதிக மதிப்பெண் பெற தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் இணைந்து பயின்று வந்தார். வாடகைக்கு அறை எடுத்து தங்கி பயிற்சிக்கு சென்றுவந்தார். இந்த நிலையில் இம்முறை தேர்வுகள் கடினமாக இருக்கும் என்று அடிக்கடி பயிற்சி மய்யம் அச்சுறுத்தி வந்ததாக தெரியவந்தது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நீட் தேர்விற்கு ஒருநாளைக்கு முன்பாக அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது நண்பர்கள் அவரோடு படிக்க வேண்டும் என்று அவரது அறைக்கு வந்த போது உள்புறமாக பூட்டி இருந்தது. கதவை திறக்க முற்பட்ட போது முடியாது போகவே கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது: பிரபாத் குமார் சிங் என்ற மாணவர் தேர்வு காரணமாக எழுந்த மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது என்று கூறிய அவர்கள், இது தொடர்பாக மேலும் விசாரணை செய்து வருவதாக கூறினர். ஏழை விவசாயக்குடும்பத்தைச்சேர்ந்த பிரபாத் குமார் சிங் தன்னுடைய தந்தையாரின் நிலத்தை விற்று நீட் தேர்வு மய்யத்திற்கு பணம் கட்டி படித்து வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment