சென்னை, மே 20- தமிழ் நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (19.5.2023) இணைய தளங்களில் வெளியானது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது.
இரண்டு வாரம் நடந்த தேர்வுகள் ஏப்ரல் 20ஆம் தேதி முடிவு பெற்றது. மொத்தம் இந்த தேர்வை 9, 38, 291 மாணவ, மாண வியர் எழுதினர். 2022-_2023 ஆம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வு கள் ஏப்ரல் 5ஆம் தேதி முடிவு பெற்றது.
7,73,688 பேர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 3,60, 908 மாணவர் கள், 4,12,779 மாணவிகள் அடக்கம். இந்த நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கள் நேற்று வெளியானது. தமிழ்நாடு பள்ளிக் கல் வித் துறை இணையதளங் களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடி யும்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியானது. தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண் ணிக்கை: 9,14,320 மாண வியர்களின் எண்ணிக்கை :4,55,017 மாணவர்களின் எண்ணிக்கை :4,59,303.
தேர்ச்சி பெற்றவர் கள்: 8,35,614 (91.39%) மாணவியர் 4,30,710 (94.66%) தேர்ச்சி அடைந் துள்ளனர். மாணவர்கள் 4,04,904 (88.16%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50% அதி கம் தேர்ச்சி பெற்றுள் ளனர்.
கடந்த மே-2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் 9,12,620. தேர்ச்சி பெற்றோர் 8,21,994. தேர்ச்சி சத விகிதம் 90.07%.
இதையடுத்து 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (19.5.2023) பிற் பகல் 2 மணிக்கு வெளியா னது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாண வர்களை விட மாணவி கள் 7.37% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப் பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல் மாணவர் கள் பதிவு செய்துள்ள அவர் களின் பெற்றோர்களின் அலைபேசி எண்ணுக் கும் ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது.
அரசுத் தேர்வுத் துறை யின் இணைய தளத்தில் மாணவர்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடி யும். அவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங் களை கொடுத்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment