சென்னை,மே31- தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் தமிழினத் தின் முன்னேற்றத்துக்காகவும், தமி ழர்கள் மான உணர்ச்சியும், அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்றும் அயராது தொண்டாற்றினார்.
தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு மக்களிடையே பகுத்தறிவு பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மக்களை அறியாமையிலிருந்து மீட்பதுடன், ஆரியத் தளையிலிருந்தும் மீட்டு, சுயமரியா தையுடன் வாழ வழிவகை செய்த தந்தைபெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் அத்துணையும் இதழ் களில் வெளியிடப்பட்டு, அவைய னைத்தும் நூல் வடிவம் பெற்றன.
குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு ஏடுகளை நடத்திய தந்தை பெரியார் 1935 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘விடுதலை'யை நாளிதழ் வடிவில் வெளியிட்டு வந்தார். ‘விடுதலை'யின் ஆசிரியராக தந்தைபெரியார், அன்னை மணி யம்மையார், அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி என பலரும் ஆசிரியர்களாக தொண்டாற்றிய நிலையில், தந்தைபெரியாரால் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 1962இல் ஆசிரியர் பொறுப்பளிக் கப்பட்டது.
ஒரு நாளேட்டுக்கு ஆசிரியராக 60 ஆண்டுகளுக்கும் மேல் பய ணித்து விடுதலையை மக்களின் சுவாசமாக மாற்றிவருகின்றார் கின்னஸ் சாதனைகளை விஞ்சிய சாதனை படைத்துள்ள ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பல்வேறு தடைகளையும், சோதனைகளையும், நெருக்கடிக ளையும் கடந்து வீறுநடை போட்டு வருகின்ற ‘விடுதலை' கரோனா உள்ளிட்ட எந்த சூழலிலும் இடைநிறுத்தப்படாத வரலாற்றுச் சாதனையுடன் தற்பொழுது ‘விடு தலை' 89 ஆம் ஆண்டில் எழுச்சி யுடன் அடிஎடுத்து வைக்கிறது.
விடுதலையில் வெளியான தந்தை பெரியார் கருத்துகளின் கருத்துக் கருவூலமாக, கருத்துப்பெட்டக மாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முயற்சியில் விடுதலை களஞ்சியமாக நாளை அதன் முதல் தொகுதி வெளியிடப்படுகிறது.
‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா மற்றும் விடுதலை 89ஆம் ஆண்டு தொடக்க விழா நாளை (1.6.2023) வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனத்தின் செயலாளர், திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது.
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றுகிறார்.
விழாவில் திமுக செய்தி தொடர்புக்குழுத் தலைவர் நாடா ளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பங் கேற்று வாழ்த்துரை ஆற்றுகிறார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் விடுதலை களஞ்சியம் முதல் தொகுதியை வெளியிட்டும், விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் சிதம்பரம் தொகுதி நாடாளு மன்ற மக்களவை உறுப்பினர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் சிறப்புரை ஆற்று கிறார்கள்.
திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்பு ரையாற்றுகிறார்.
திராவிட மகளிர் பாசறை மாநில செயாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றி கூறுகிறார்.
விடுதலை களஞ்சியம் முதல் தொகுதி நூலின் நன்கொடை மதிப்பு ரூ.500. விழாவையொட்டி ரூ.400க்கு வழங்கப்படுகின்றது.
No comments:
Post a Comment