நாட்டின் தேவையில் 80 விழுக்காடு லித்தியம் படிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

நாட்டின் தேவையில் 80 விழுக்காடு லித்தியம் படிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு

ஜெய்ப்பூர், மே 10 - காஷ்மீரை தொடர்ந்து ராஜஸ்தானில் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் நாட்டின் லித்தியம் தேவையில் 80 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட் டதைவிட பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டது அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது. தற்போது செல்போன், லேப்டாப், கம்ப் யூட்டர், மின்சார வாகனங்கள், விமான உற்பத்தி, சூரிய மின் தகடுகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் லித்தியம் வகை பேட்டரிகள் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் அடுத்த 25 ஆண்டுகளில் லித்தியத்தின் தேவை 500 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. தங்கத்துக்கு இணையாக லித்தியத்துக்கு மதிப்பு அளிக்கப்படுவதால் அந்த தனிமம், ‘வெள்ளை தங்கம்' என்று அழைக்கப்படுகிறது.

சிலி, ஆஸ்திரேலியா, அர்ஜென் டினா, சீனா, பொலிவியா உள் ளிட்ட நாடுகளில் லித்தியம் படி மம் அதிகமாக காணப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6,000 கோடி மதிப் பிலான லித்தியத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் பாதிக்கும் மேல் சீனாவில் இருந்து வாங்கப்படுகிறது.

வரும் 2030ஆம் ஆண்டில் இந் தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை 14 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட லித்தியத்தை மிக அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண் டிய கட்டாயம் எழுந்திருக்கிறது.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ் மீரின் ரியாசி மாவட்டம், சலால் ஹைமானா பகுதியில் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 59 லட்சம் டன் அளவுக்கு லித்தியம் இருப்பதாக ஒன்றிய சுரங்கத் துறை அறிவித்துள்ளது. விரைவில் அங்கு லித்தியத்தை வெட்டி எடுப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ராஜஸ்தானின் டேகானா பகுதியில் உள்ள ரேவந்த் மலைப் பகுதியில் பெருமளவில் லித்தியம் படிமம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறிய தாவது:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் கடந்த 1914ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் டேகானா பகுதி, ரேவந்த் மலையில் டங்ஸ்டன் தனி மம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அங்கிருந்து பெருமளவில் டங்ஸ்டன் தனிமம் வெட்டி எடுக் கப்பட்டது. இதனை ஆயுத தயா ரிப்புக்கு ஆங்கிலேயர்கள் பயன் படுத்தினர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதே பகுதியில் டங்ஸ்டன் தனிமம் எடுக்கப்பட்டது. இந்த தனிமம் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. சுமார் 1,500 பேர் அங்குள்ள சுரங்கத்தில் பணி யாற்றி வந்தனர். பன்னாட்டு அரங் கில் சீனா மிகக் குறைந்த விலையில் டங்ஸ்டன் தனிமத்தை ஏற்றுமதி செய்ததால், இந்தியாவால் போட் டியை சமாளிக்க முடியவில்லை. ரேவந்த் மலையில் டங்ஸ்டன் தனிமத்தை வெட்டி எடுப்பதற்கான செலவு அதிகரித்ததால் கடந்த 1993-களில் சுரங்கம் மூடப்பட்டது.

அதே பகுதியில் உயர்தரமான டங்ஸ்டன் தனிமம் கிடைக்குமா என்பது தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது நல் வாய்ப்பாக பெருமளவில் லித்தியம் படிமம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த லித்தியம் படிமத் தின் மூலம் நாட்டின் தேவையில் 80 சதவீதத்தைப் பூர்த்தி செய்ய முடியும்.

ராஜஸ்தானின் ஜெய்சல்மர், பார்மர் உள்ளிட்ட பகுதிகளிலும் லித்தியம் படிமம் இருப்பதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த இடங்களிலும் ஆய்வுப் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

No comments:

Post a Comment