சென்னை, மே 20- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 79.60 சதவீத மாணவ, மாண வியர் தேர்ச்சி பெற்றுள் ளனர். சென்னை மாநக ராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர் நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
2022_-2023ஆம் கல்வி யாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 3538 மாணவர்கள், 3375 மாணவி யர்கள் என மொத்தம் 6913 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் 2622 மாணவர்கள், 2881 மாணவியர்கள் என மொத் தம் 5503 மாணவ, மாண வியர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 79.60 ஆகும். பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணி தத்தில் 2 மாணவியரும், அறிவியலில் ஒரு மாண வியும் முழு மதிப் பெண்கள் பெற்றுள் ளனர். மேலும், 12 மாண வர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில் 50 மாணவ, மாணவியர்கள் 451க்கு மேல் மதிப் பெண் களும், 305 மாணவ. மாணவி யர்கள் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 704 மாணவ, மாணவி யர்கள் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில் புல்லா அவென்யூ, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 500 மதிப் பெண் களுக்கு 493 மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு மற்றும் பந்தர் கார்டன் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 500 மதிப் பெண் களுக்கு 475 மதிப்பெண் கள் பெற்று இரண்டாமி டத்தையும், கோயம்பேடு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 473 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், வேளச்சேரி சென்னை மேல்நிலைப்பள்ளி 500 மதிப்பெண்களுக்கு 472 மதிப்பெண்கள் பெற்று அய்ந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் ரங்க ராஜபுரம் மற்றும் ஆயி ரம் விளக்கு சென்னை உயர்நிலைப்பள்ளிகள் 100 சதவீதத்துடன் முதலி டத்தையும், கொடுங்கை யூர் சென்னை உயர் நிலைப்பள்ளி 98.04 சத வீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நுங்கம் பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 97.92 சதவீதத் துடன் மூன்றாம் இடத் தையும், வண்ணாரப் பேட்டை சென்னை உருது ஆண்கள் உயர் நிலைப் பள்ளி 97.44 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், குக்ஸ் சாலை சென்னை உயர் நிலைப்பள்ளி 97.30 சதவீதத்துடன் அய்ந் தாம் இடத்தையும் பெற் றுள்ளன.
No comments:
Post a Comment