புதுடில்லி, மே 27- ரிசர்வ் வங்கி (ஆர்பி அய்) சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த கங்ரா மத்திய கூட்டுறவு வங்கியின் நடப்புக் கணக்கிலிருந்து இணையவழியில் ரூ. 7.79 கோடி திருடப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக மத்திய கூட் டுறவு வங்கியின் முதுநிலை மேலா ளர் (தகவல் தொழில்நுட்பம்) சதேவ் சங்வன் அளித்த புகாரின் பேரில் டில்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப் அய்ஆர்) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதிமுதல் 3 நாள்களில் 3 தனித்தனி பரிவர்த் தனைகள் மூலமாக இந்த இணைய வழித் திருட்டு நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டுறவு வங்கியின் நிதிப் பரிவர்த்தனைகளை ஆர்பிஅய் கண்காணித்து வருவதோடு, கூட் டுறவு வங்கியின் நடப்புக் கணக் கையும் பராமரித்து வருகிறது. அந்த வகையில், இந்த இணைய வழித் திருட்டுக்கு ரிசர்வ் வங்கியே பொறுப்பாகியுள்ளது.
திருடப்பட்ட பணம் எந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு உள்ளது என்பது அடையாளம் காணப்பட்டுவிட்டது என்று கங்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறியபோதும், பணத்தை எடுத்த நபர்களைக் கண்டறிய முடியாமல் ஆர்பிஅய் உயர் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக சதேவ் சங்வன் அளித்த புகாரில், ‘ஆர்பிஅய்-யுடன் கங்ரா வங்கி வைத்துள்ள நடப்புக் கணக்கில் தேசிய மின்னணு பணப் பரிவர்த் தனை, ரியல் டைம் கிராஸ் செட் டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) உள் ளிட்ட திட்டங்களுக்கான கணக்கு கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் கணக்குகளை வைத்துள்ளனர். கங்ரா வங்கி மற்றும் ஆர்பிஅய் நடைமுறைகளின்படி, கூட்டுறவு வங்கியின் நடப்புக் கணக்கிலிருந்து ஒரு தீர்வு கணக்குக்கு தினமும் அதிகபட்சம் ரூ. 4 கோடி வரை மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். இந்த நடப்புக் கணக்கின் தினசரி பரிவர்த்தனைகள் தொடர் பான அறிக்கையை நாளின் இறுதி யில் அல்லது அடுத்த நாள் தொடக் கத்தில் கங்ரா வங்கிக்கு மின்னஞ்சல் மூலமாக ஆர்பிஅய் அனுப்பும்.
அதுபோல, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி ஆர்பிஅய் சார்பில் அனுப்பப்பட்ட பரிவர்த்தனை அறிக் கையில், வழக்கத்துக்கு மாறான பரிவர்த்தனை நடைபெற்றிருப் பதை கங்ரா வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர். அதாவது தீர்வுக் கணக்கிலிருந்து ரூ. 3.14 கோடி நடப்புக் கணக்குக்கு சர்ச்சைக்குரிய வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந் தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வங்கி ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாள்களிலும், இதே போன்று ரூ. 2.40 கோடி மற்றும் ரூ. 2.23 கோடி பணம் தீர்வுக் கணக் கிலிருந்து பரிமாற்றம் செய்யப்பட் டிருந்தது. மொத்தமாக ரூ. 7.79 கோடி அளவுக்கு மோசடி நடை பெற்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக ஆர்பிஅய் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து, ரூ. 7.79 கோடியும் எந்த வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது அடை யாளம் காணப்பட்டது. ஆனால், பணத்தை எடுத்த நபர்களைக் கண்டறியமுடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இணைய குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் இந்தத் திருட்டில் ஈடு பட்டிருக்கலாம் என டில்லி காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் விசார ணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
டில்லி அரசு சார்பில் நிர்வகிக் கப்பட்டு வரும் இந்தக் கூட்டுறவு வங்கி, டில்லியில் பல்வேறு பகுதிக ளில் 12 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment