சூடானில் சூடு தணியவில்லை: மேலும் 754 இந்தியர்கள் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

சூடானில் சூடு தணியவில்லை: மேலும் 754 இந்தியர்கள் மீட்பு

புதுடில்லி, மே 2- வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

இதையடுத்து, சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க, ‘ஆப்பரேஷன் காவிரி’ என்ற திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் (30.4.2023) வரை, 606 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மேலும் 754 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில், 392 பேர் அடங்கிய குழு, ராணுவ விமானம் வாயிலாக புதுடில்லி வந்தடைந்தது.

மற்றொரு விமானம், 362 பேருடன் பெங்களூரு வந்தது. இதுவரை மொத்தம், 1,360 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். ‘அனைத்து இந்தியர்களும் மீட்கப்படும் வரை, ஆப்பரேஷன் காவிரி தொடரும்‘ என, ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment