மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

மெட்ரோ முதல் கட்ட திட்டத்தில் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல்

சென்னை, மே 24 - மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப் பதால் 6 பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் இயக்கப் படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் இரண்டு வழித் தடங்கள் மூலம் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணி கள் நடைபெற்று வரு கின்றன.

2022ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில்களில் 6.09 கோடி பேர் பயணம் செய்துள் ளனர். இந்நிலையில், முதல் கட்ட வழித்தடத் தில் பயணிகளின் வசதி களுக்காக மெட்ரோ ரயில்களில் கூடுதலாக ரயில் பெட்டிகளை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒரு வர் கூறுகையில்:

முதல் கட்ட திட்டத் தில் 10,000 பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது பயணம் செய் வோர் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. அதன்படி சமீப காலங்களில் நாளொன்றுக்கு ரயிலில் பயணம் மேற்கொள்பவர் களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக அதிகரித்துள் ளது. எதிர்காலத்தில் பய ணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ப தால் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். ரயில் களின் எண்ணிக்கையை அதிகரித்தால் சிக்னல் அமைப்பு, நடைமேடை திரை கதவுகள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. 

இது தவிர 6 பெட்டி களை கொண்ட ரயில்க ளுக்கு இடமளிக்கும் வகையில் ரயில் நிலையங் களில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும்.

மேலும் கூடுதல் ரயில் கள் வாங்கி அதற்கு ஏற்ற வாறு ரயில் நிலையங் களை புதுப்பிப்பதற்கு ஆகும் செலவை விட கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பது குறைந்த செலவாகும். இந்த திட் டத்தை செயல்படுத்துவ தற்கான அறிக்கை தயா ரிக்கப்பட்டு வருகிறது. 

அதனை மாநில மற்றும்  ஒன்றிய அரசி டம் அனுமதி பெற்று பணிகள் முன்னெடுக் கப்படும். மேலும் இந்த திட்டம் ரூ.2800 கோடி யில் செயல்படுத்தப்படும். இதற்கான நிதியை பெற பன்னாட்டு வங்கியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வரு கிறது.

இவ்வாறு மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment