சென்னை,மே16 - சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தில் 48 நீதிமன்ற விசாரணை அறைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 57ஆக உயர்த்தவும், அதில் 5 நீதிமன்ற அறைகளை தனியே காணொலிக் காட்சி விசாரணைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி, உயர் நீதிமன்ற பிரதான கட்டடத்தில் இருந்த நீதிமன்ற அறைகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 6 நீதிமன்ற அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய 6 நீதிமன்ற அறைகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று (15.5.2023) திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு,
சி.சரவணன், ஜி.சந்திரசேகரன், முகமது ஷபீக், சுந்தர் மோகன், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஆர்.நீலகண்டன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment