உச்சநீதிமன்றத்தில் 69,000, உயர்நீதிமன்றங்களில் 59,000 வழக்குகள் நிலுவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

உச்சநீதிமன்றத்தில் 69,000, உயர்நீதிமன்றங்களில் 59,000 வழக்குகள் நிலுவை

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 59 லட்சத் துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவை யில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உச்சநீதிமன்ற இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 59,87,477 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய நீதித் துறை தகவல் மய்யத்தில்இருந்து இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மிக அதிக பட்சமாக 10.30 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் குறைந்த பட்சமாக 171 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தேசிய அளவில் அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து 4.32 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நிலுவை வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்க ஒன்றிய அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment