திருச்சி மாநகரில் பல்வேறு வழக்குகளில் 69 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

திருச்சி மாநகரில் பல்வேறு வழக்குகளில் 69 பேர் கைது

திருச்சி, மே 2 திருச்சி மாநகரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனைபாதுகாக்கும் பொருட்டு, கடந்த ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொதுஇடங்களில் கஞ்சா போதை பொருட் களை விற்பனை செய்த 6 நபர்கள் மீது எடமலைப் பட்டிபுதூர் காவல் நிலை யத்தில் 5 வழக்குகளும், கே.கே.நகர் காவல் நிலை யத்தில் 1 வழக்குஉட்பட 6 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 15 நபர்கள் மீது கண்டோன்மெண்ட், சிறீ ரங்கம்,  பாலக்கரை காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், அமர்வு நீதி மன்றம், எடமலைப்பட்டி புதூர், 'பொன்மலை, காந்தி மார்க்கெட்,உறையூர் ஆகிய காவல் நிலையங்க ளில் தலா 1 வழக்கு உட் பட 11 லாட்டரி வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு, 15 நபர்கள் கைது செய் யப்பட்டு, அவர்களிடமி ருந்து 139 துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6,380 பணத்தை கைப் பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்தில் திருச்சி மாநகர எல்லைக் குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மது பான பாட்டில் விற்பனை செய்த தாக 48 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிட மிருந்து 402 மதுபாட்டில்கள் (மதிப்பு சுமார் ரூ.55,000) கைப் பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணி காக்க சட்ட விரோதமான செயல் களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங் களில் ஈடுபடுவர்கள் மற்றும் சமூக விரோதி களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும் என மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தெரிவித்தார்.

No comments:

Post a Comment