தமிழ்நாடு முழுவதும் 67 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

தமிழ்நாடு முழுவதும் 67 லட்சம் பேர் அரசு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பு

சென்னை, மே 14 - தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறு பவர்கள் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப் படுகிறது.

இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத் தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற் றிய விவரம் வருமாறு:-

பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண் ணிக்கை 31 லட்சத்து 7 ஆயிரத்து 600; பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 77 ஆயிரத்து 671; மூன் றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266, என மொத்தம் 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 பேராகும்.

அவர்களில் 18 வயதுக்கு உள் பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர் கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர்.

46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,111 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட் சத்து 46 ஆயிரத்து 358 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment