சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதேபோல, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப் பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்து, டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற மருத்துவ சுற்றுலா மாநாட்டுக்குப் பிறகு, மாநிலத்துக்கு வரும் மருத்துவ சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனாவுக்குப் பிறகு, 2021-இல் 57,622-ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-இல் 4,07,139-ஆக உயர்ந்து. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 2,67,773 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இதேபோல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2021ஆ-ம் ஆண்டில் 11.53 கோடியாக இருந்தது. இது 2022-இல் 21.86 கோடியாக உயர்ந்தது. நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் 6.65 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 6.68 கோடி பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். கோடை விடுமுறையில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவ்வாறு சுற்றுலாத் துறை அமைச் சர் கா.ராமச்சந்திரன் கூறினார். இந்தக் கூட்டத்தில், சுற்றுலாத் துறை பொது மேலாளர் லி.பாரதிதேவி, திட்டப் பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ் மற்றும் பொறி யாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment