திண்டுக்கல், மே 8- 12ஆம் வகுப்புத் தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 12ஆம் வகுப்புத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்களை மாணவி ஒருவர் பெறுவது இதுவே முதல் முறை.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று (8.5.2023) காலை வெளியிடப்பட்டன. வழக் கம்போல மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற் றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் இல்லாத ஒரு வரலாற்று சாதனையை திண்டுக்கல் மாவட்ட மாணவி நந்தினி படைத் துள்ளார். 12 ஆம் வகுப்புத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 12 ஆம் வகுப்புத் தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதல் முறை.
திண்டுக்கல் நகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் படித்து வந்த சரவணக்குமார்- பானுபிரியா இணையரின் மகளான நந்தினி. தமது வரலாற்று சாதனை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும் என கவலைப்படவில்லை. எனக்கு கல்விதான், படிப்புதான் சொத்து என என் பெற்றோர் சொல்லி சொல்லி வளர்த்தனர். அதனையே நானும் இடைவிடாமல் கடைப்பிடித்தேன். அதனால்தான் இவ்வளவு மதிப் பெண்களை என்னால் பெற முடிந்துள்ளது. நம்பிக்கையுடன் முயற் சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ‘ஆடிட்டராக’ வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேல்படிப்புகளை படிக்க உள்ளேன். இவ்வாறு மாணவி நந்தினி கூறினார்.
No comments:
Post a Comment