கடவுள் சக்தி இவ்வளவுதான்! - கோயில் விழாவில் தேனீ கொட்டி பக்தர்கள் 60 பேர் மருத்துவமனையில் அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

கடவுள் சக்தி இவ்வளவுதான்! - கோயில் விழாவில் தேனீ கொட்டி பக்தர்கள் 60 பேர் மருத்துவமனையில் அனுமதி

அரூர், மே 3- தருமபுரி மாவட் டம், அரூர் அருகே கோயில் திரு விழாவில்  தேனீக்கள் கொட்டியதில் 100 க்கும் மேற்பட்டோர் காயத் துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.                          

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த  ஈட்டியம்பட்டியில் உள்ள மாமரத்து முனியப்பன் கோயில்  திருவிழா நடைபெற்றது. திருவிழா வில் சுமார் 500 பேருக்கு மேற்பட் டோர் கலந்து கொண்டு,  ஆடு ,கோழி, பன்றி ஆகியவற்றை பலி யிட்டு, பட்டாசு வெடித்தனர்.

அப்போது கோயிலில் உள்ள அரச மரத்தில் கட்டப்பட்டிருந்த மலைத் தேனீ கூட்டின் மீது பட் டாசு பறந்து விழுந்து வெடித்ததில் கூட்டில் இருந்த  தேனீக்கள் அங்கிருந்த பக்தர்களை துரத்தி துரத்தி கடித்தன.

இதனால் பயந்து போன பக்தர்கள் நாலாப் பக்கமும் சிதறி  ஓட்டம் பிடித் தனர். இருப்பினும் மலைத் தேனீ விரட்டி விரட்டி கொட்டியதில் பெண்கள், குழந்தைகள், பெரியவர் கள் என்ன காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வலி யால் அலறித் துடித்து கத்தி கதறி உள்ளனர்.

காயம் பட்டவர்களை அங்கி ருந்தவர்கள்  உடனடியாக மீட்டு அய்ந்துக்கு மேற்பட்ட  108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் தீர்த்த மலை, அரூர், தர்மபுரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டுள்ளனர்.  பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இதனால் கோயில் அருகே பல கிலோமீட்டர் தூரத் திற்கு யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment