திருச்சி, மே 11 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அய்ம்பெரும் விழாவிற்கான சிறப்பு மாநில செயற்குழு -பொதுக்குழு கூட்டம் திருச்சி இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் தி.அருள்குமார், மாநில பொருளாளர்
ப. உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் வருமாறு:
1. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மறைந்த மேனாள் மாநில செயலாளர் ரமேஷின் படத்திறப்பு விழா மற்றும் முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி அவர் தயாரித்த பாடலை வெளியிடுதல்,
தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 53,000 ஆசிரியர்களை தனது ஒரே கையெழுத்தில் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அவரை நன்றி மறவாமல் நினைவு கூரும் வகையில் 53,000 மாணவர்களுக்கு 53,000 பேனாக்கள் வழங்கும் நிகழ்வை தொடங்குதல் மற்றும் சங்கம் கடந்த வந்த பாதை இதழ் வெளியிடுதல்,
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்குதல், சிறந்த மாணவர்களுக்கான இளஞ்சூரியன் விருது வழங்குதல் ஓய்வு ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல் உள்ளடக்கிய அய்ம்பெரும் விழாவினை வரும் 21.05.2023 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 100 ஆசிரியர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும், இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர் கல்வித்துறை அமைச்சர்
க.பொன்முடி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், கல்வித்துறை உயரதிகாரிகள், அலுவலக நண்பர்கள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிற்பிக்க உள்ளதால், விழாவை வெகு விமரிசையாக நடத்திடவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானம் உள்ளிட்ட மேலும் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில், மாநில தலைமை நிலையச் செயலாளர் கி.கண்ணதாசன், மாநில சட்ட ஆலோசகர்கள் ராஜா, நேதாஜி மாநில துணைத் தலைவர்கள் ரமேஷ்,அத்தியப்பன், மாநில செய்தித் தொடர்பாளர் கு.மஞ்சுநாதன் மாநில மகளிரணி ஒருங்கிணைப் பாளர்கள் நித்ய நிர்மல், மெஹராஜ் பேகம் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக திருச்சி மாவட்டச் செயலாளர் உதுமான் அலி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment