ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள்: நிர்பயா நிதியின் கீழ் அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள்: நிர்பயா நிதியின் கீழ் அமைப்பு

சென்னை, மே 22- ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாது காப்பை உறுதி செய்யவும், ரயில் களில் குற்றங்கள் நிகழாமல் தடுக் கவும், ரயில்களில் கடத் தல்கள் நடைபெறுவதை தடுக் கவும், குற்ற வாளிகள் தப்பித்துச் செல் வதை தடுக்கவும், தமிழ் நாட்டின் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. 

அதன்படி, தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம் புத்தூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக் கள் பொருத் தப்பட்டுள்ளன. இதேபோல் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில் களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள்.

இதுவரை நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங் களில் 6,646 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் 759 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டு உள்ளன. ரயில் பெட்டி களில் ஏதேனும் குற்றங்கள் நடந் தால், ரயில்களில் சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் ஏதேனும் நடந்தாலும் உடனே கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நிர்பயா நிதியின் கீழ் ரூ500 கோடி செலவில் 900 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்தது. குறிப்பாக, ரயில் நிலை யங்களில் உள்ள நடைபாதைகள், ஓய்வு அறைகள், பயணச் சீட்டு வழங்கும் அறை ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் படிப்படியாக பொருத்தப்பட்டு வருகிறது. இதை ரயில்வே பாதுகாப்பு அதி காரிகள் கண்காணித்து வரு கிறார்கள்.

இதன் மூலம், 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு, குறிப்பாக பெண் களின் பாதுகாப்பு உறுதிபடுத் தப்படுகிறது. இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் முதல்கட்ட திட்டத்தின் கீழ், சென்னை கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் ரூ.9 கோடியே 79 லட்சம் செலவில் 528 கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சேப் பாக்கம், சிந் தாதிரிப்பேட்டை, திருவல்லிக் கேணி, மந்தைவெளி, பசுமை வழிச்சாலை, கோட்டூர் புரம், இந்திரா நகர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, சென்னை பூங்கா, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், சைதாப் பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட 26 ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதேபோல், 2 மற்றும் 3ஆம் கட்ட திட்டத்தில் அரக் கோணம், ஆந்திர மாநிலம் கூடூர் வழித்தடங்களில் உள்ள 50 ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த ஒப் பந்தப் புள்ளி விடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment