* டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
பொதுச்செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
அரசு மருத்துவக் கல்லூரிகளின் 500 எம்.பி. பி.எஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது கண்டனத்திற்குரியது.
அங்கீகாரத்தை காத்திட தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங் களுக்கான செய்தி.
இந்தியாவிலேயே மிகச் சிறந்து விளங்கும் பழைமையான,வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவக் கல்லூரி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி . இக்கல்லூரி 1938இல் தொடங்கப்பட்டதாகும். உலகப் புகழ் பெற்ற இம்மருத்துவக் கல்லூரிக்கும், திருச்சி கி.ஆ.பெ .விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அங்கீகா ரத்தை ரத்து செய்து, தேசிய மருத்துவ ஆணையத் தின் (என்.எம்.சி) இளநிலை மருத்துவக் கல்வி வாரி யம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி யில் சேர முடியும் என நம்பிக்கையோடு காத்திருக் கும் பல மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்டான்லியில் 250 ,திருச்சி மருத்துவக் கல்லூரியில் 150,தருமபுரி மருத்துவக் கல்லூரியில் 100 என மொத்தம் 500 எம்.பி.பி.எஸ் இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தமுடியாமல் போய் விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கட்டணம் வெறும் ரூபாய் 13,610 மட்டுமே. 500 இடங்கள் பறிபோனால், 500 பேர் இந்த குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு பறிபோகும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு சரியாக இல்லை, சி.சி.டி.வி கேமரா பதிவுகளும் சரியாக இல்லை என்ற கார ணங்களைக் கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள் ளது. இவை சிறு குறைபாடுகள்.
இக்குறைபாடுகளை சரி செய்ய கால அவகா சத்தை வழங்கி ,அங்கீகாரத்தை தொடர்ந்திருக்க வேண்டும். அதைவிடுத்து ,அங்கீகாரம் ரத்து என்பது சரியான முடிவல்ல.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் மருத்துவப் பேரா சிரியர்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவியது. தமிழ்நாட்டிலும் அப்பிரச்சினை நிலவியது. பல நேரங்களில் காலிப்பணியிடங்களையும் நிரப்புவ தில்லை. புதிய பணியிடங்களையும் உருவாக்குவ தில்லை. இதை மறைக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளும், அரசு மருத்துவக் கல்லூரிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டன.
அதாவது ஒரே மருத்துவப் பேராசிரியர் மூன்று நான்கு மருத்துவக் கல்லூரிகளில் பணிசெய்வதாக காட்டப்படும் மோசடிகள் நடந்தன.பேராசிரியர்கள் பல கல்லூரிகளிலும் ஊதியங்களை பெற்றனர். மாநில அரசுகளும் ,இந்திய மருத்துவக் கழகத்தினர் (MCI) ஆய்வுக்கு வருகின்ற பொழுது, வேறு மருத் துவக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களை, ஆய்வு நடத்தப்படும் கல்லூரிக்கு தற்காலிகமாக இடமாறுதல் அளித்து ஏமாற்றின.
ஆய்வுக் குழு, மற்றும் எம்.சி.அய் யில் நிலவிய ஊழல் போக்கும் இத்தகைய ஏமாற்று வேலை களுக்கு உதவின. இத்தகைய ஏமாற்று வேலைகள் மருத்துவக் கல்வியின் தரத்தை பாதித்தது.
இந்நிலையில், நவீன தொழில் நுட்பம், ஆதார், வங்கிக்கணக்குகள் ஆதாருடன் இணைத்தது போன்றவை இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட உதவி யுள்ளது. இவற்றின் உதவியோடு, பேராசிரியர்கள் இருப்பது போல் ஏமாற்றும் பிரச்சினைக்கு தீர்வு காண, எம்.சி.அய் க்குப் பதிலாக உருவாக்கப் பட்டுள்ள என்.எம்.சி முயல்கிறது. என்றாலும், ஸ்டான்லி போன்ற மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை பல்வேறு நடைமுறை சிக்கல்களை உரு வாக்குகின்றன.ஒரு மருத்துவக் கல்லூரிக்கு கீழே பல இடங்களில் மருத்துவமனைகள், துறைகள் இயங்குவது, 24 மணிநேரப் பணி, நீதிமன்றப் பணி, முக்கியப் பிரமுகர்களுக்கான பணி போன்றவை இதில் அடங்கும். இவற்றை என்.எம்.சி கவனத்தில் கொள்ளாமல் எந்திரத்தனமாக செயல்பட்டது சரியல்ல. என்.எம்.சி.யில் நிலவும் ஊழல் முறை கேடுகள் பேராசிரியர் மோசடிப் பிரச்சினையை தீர்க்க வில்லை. பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றன.போதிய பேராசிரி யர்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல ,நோயாளி களே இல்லாமலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடைபெறுகின்றன. இந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எப்படி திறமை யான மருத்துவர்களாக திகழ முடியும்? இத்தகைய மருத்துவக்கல்லூரிகள்மீது எந்த நடவடிக்கை களையும் என்.எம்.சி எடுப்பதில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மூன்று மருத்துவக் கல்லூரிகளில், பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு குறைபாடுகள்,சி.சி.டி.வி குறைபாடுகளை காரணம் காட்டி ,அங்கிகாரத்தை ரத்து செய்தது, என்.எம்.சி மீது பல அய்யங்களை ஏற்படுத்துகிறது. எற்கெனவே, என்.எம்.சி யில் மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், என்.எம்.சி முழுமையாக, ஒன்றிய மக்கள் நல் வாழ்வுத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் சென்று விட்ட நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு, தமிழ்நாடு அரசுக்கு எதிரான போக்கு இதில் உள்ளதோ என்ற அய்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய கருத்தை தமிழ்நாடு அரசும் வெளியிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளை ஒழுங்கு படுத்துவதாகக் கூறிக்கொண்டு, அரசு மருத்துவக் கல்வி இடங்களை ஒழித்துக் கட்டுவது ஏற்புடைய தல்ல. எம்.சி.அய் ஊழல் மிகுந்த அமைப்பாக மாறிவிட்டது.
அதன் ``இன்ஸ்பெக்ஷன் ராஜ்’’ புதிய மருத் துவக் கல்லூரிகள் தொடங்கிட தடையாக உள்ளது. ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை எம்.சி.அய் யில் இல்லை போன்ற காரணங்களைக் கூறிதான் ,எம்.சி.அய் ஒழிக்கப்பட்டு, என்.எம்.சி, 2019இல் கொண்டுவரப்பட்டது. எம்.சி.அய் யில் பல குறைபாடுகள் இருந்தது உண்மை. அது,தன்னாட்சி அமைப்பு என்ற பெயரில், ஆதிக்கமும் ,செல்வாக் கும் மிகுந்த ஊழல் மருத்துவப் பேர்வளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. எம்.சி.அய் யின் அராஜகம் சகித்துக் கொள்ளமுடியாத உச்சத்துக்கு சென்றது. அதற்கு மாற்று என்று சொல்லி, அதைவிட ஒரு மோசமான அமைப்பாக என்.எம்.சி உருவாக்கப்பட்டுள்ளது.
இது மருத்துவக் கல்வியை தனியார் மயமா வதற்கு சாதகமாக உள்ளது. தனியார் மருத்துவ நிறுவனங்களில் மருத்துவ இடங்களில் 50 விழுக் காட்டு இடங்களுக்குத்தான் கட்டணங்கள் முறைப் படுத்தப்படுத்தப்படும் எனக் கூறியதோடு, மீதி
50 விழுக்காடு இடங்களுக்கு அந்நிறுவனங்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என அனுமதித்தது , தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை பாதித்துள்ளது.
தனிபட்ட மருத்துவ நிறுவனங்கள் தாங்களே சில படிப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனவும் என்.எம்.சி சட்டம் கூறுகிறது. நாடு முழுவதும் எவ்வளவு எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் பதிவு பெற்றிருக்கிறார்களோ,அந்த எண்ணிக்கை யில் 3இல் பகுதி அள விற்கு, நவீன அறிவி யல் மருத்துவத்தோடு தொடர்புடையவர்கள், சமூக சுகாதாரம் வழங் குபவர்கள் (Community Health Provider) என்ற பெயரில் ,நடுவாந்திர (Mid level) மருத் துவத் தொழில் செய்ய வரம் புக்குட்பட்ட உரிமம் வழங்கப்படும் என, என்.எம்.சி சட்டம் கூறுகிறது. இவை எல்லாம் மருத்துவ சேவைத் தரத்தை பாதிக்காதா?
ஒருங்கிணைந்த அடிப்படை மருத்துவக் கல்வி, கலப்பு மருத்துவம் (Mixopathy) போன்றவையும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச்செய்யும். இது மருத்துவ சேவைத் தரத்தை பாதிக்கும். ஒருபக்கம்,மருத்துவத் தரத்திற்கு கேடு பயக்கும் செயல்களை செய்து கொண்டே மறுப் பக்கம், சிறு சிறு காரணங்களுக்காக அரசு மருத் துவக் கல்லூரிகளின், இளநிலை மருத்துவ இடங்க ளுக்கு, என்.எம்.சி அனுமதி மறுப்பது வேடிக்கை யாக உள்ளது.
மாணவர்கள் பேராசிரியர் விகிதங்கள் உயர்த்தப் பட்டது, பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்த்தப்பட்டது, மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான, விதிமுறைகளில் பல தளர்வுகள் செய்தது, மருத்துவக் கல்வித் தரத்தை பாதிப்பதமாக உள்ளது.இதை பற்றி எல்லாம் என்.எம்.சி கவலைப்படவில்லை.
சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் உள்ளது. ஆகவே மருத்துவமனைகளை நடத்துவது ,மருத்துவர்களை உருவாக்குவது, செவிலியர்களை உருவாக்குவது போன்றவை மாநில அரசின் கட் டுப்பாட்டில் இருக்க வேண்டும். மருத்துவக் கல்வியை முறைப்படுத்தும் அதிகாரம் மாநில மருத்துவக் கவன்சில்களுக்கு வழங்கப்பட வேண் டும். ஒரு கூட்டமைப்பாக மட்டுமே என்.எம்.சி போன்ற அமைப்புகள் இருக்க வேண்டும்.அதுவே மாநில சுயாட்சிக்கும்,கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும்.
தமிழ்நாடு அரசு, பறிபோகும் ஆபத்தில் உள்ள 500 இளநிலை மருத்துவ இடங்களை காத்திட வேண்டும்.என்.எம்.சி யால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்ட மைப்பு களையும் மேம்படுத்த வேண்டும். பேரா சிரியர்கள் பற்றாக்குறையை போக்கிட வேண்டும். தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் பதவி உயர்வு கலந் தாய்வுகள் நடத்தப்படாததால், 450 பேராசிரியர்கள் மற்றும் 550 இணைப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட வேண்டும்.
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள அரசு உடனடியாக தீர்க்க வேண்டும். கோவை அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி பற்றாக் குறை உள்ளது. எனவே,உடனடியாக புதிய விடு திகளை கட்டட நடவடிக்கை எடுத்திட வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்களின் தற்போதைய விடுதி உள்ள இடத் திலேயை புதிய விடுதியை கட்டித்தர வேண்டும். அந்த இடத்தை வேறு துறைகளின் பயன்பாட்டிற்கு மாற்றுவதை கைவிட வேண்டும்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை நடத்தாமல் கல்லூரி நிர்வாகம் இழுத் தடிக்கும் வேலையை செய்வது சரியல்ல.உடனடி யாக பட்டமளிப்பு விழாவை நடத்திட வேண்டும். எம்.ஆர்.பி தேர்வில் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு, தமிழ்தேர்வு வைப்பதை கைவிட வேண்டும். சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் பன் னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் ,இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பும்,பதவி உயர்வும் பாதிக்கப்படு கிறது. எனவே,ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அனை வரையும் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment