சென்னை, மே 27 தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங் களை சேர்ந்த 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.89.50 கோடி வழங்கி உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று (26.5.2023) வெளியிட்டுள்ள அறிக்கை: கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைகாலத்தின்போது மீன்பிடி விசைப்படகுகள், இழு வலை படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள்.
இந்த மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000 வீதம் மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கப்படுகிறது. நடப் பாண்டிற்கான (2023) மீன்பிடி தடைகாலத்தில் தமிழ்நாட்டில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூ.89.50 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment