ஆன்லைன் வேலை எனக் கூறி ரூ.50 கோடி மோசடி பா.ஜ.க. பிரமுகர் உட்பட 3 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

ஆன்லைன் வேலை எனக் கூறி ரூ.50 கோடி மோசடி பா.ஜ.க. பிரமுகர் உட்பட 3 பேர் கைது

திருமலை, மே 5- தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ஆன்லைன் வேலை ஆசைகாட்டி ரூ.50 கோடி வரையில் மோசடி செய்த பாஜ பிரமுகர் உள்பட 3 பேரை தெலங் கானா மாநிலம் சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தை சேர்ந்த வர் காட்கோனி சக்ரதர் ​​கவுட். இவர் பாஜவில் சித்திபேட்டை தொகுதி தலைவராக உள்ளார். பி.காம் பட்டதாரியான இவர் எல்.அய்.சி முகவரா கவும், தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஆடம்பர வாழ்க் கைக்கு ஆசைப்பட்ட இவர், ஆந்திரா, தெலங் கானா, தமிழ்நாடு, கரு நாடகா மற்றும் கேரளா மாநில இளைஞர்களை குறிவைத்து ஒரு திட்டம் வகுத்தார். அதாவது, வேலையில்லா இளைஞர் களுக்கு வீட்டில் இருந்த படியே டேட்டா என்ட்ரி வேலை வழங்குவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வசூ லித்துள்ளார். ஆனால், யாருக்கும் வேலை வழங்க வில்லையாம். இதனால், தாங்கள் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த இளை ஞர்கள் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து அய்தராபத்தில் உள்ள சித்திபேட்டை தொகுதி பாஜ தலைவரான கட் கோனி சக்ரதர் கவுட், அவரது நண்பர்களான ஷ்ரவன், கணேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய் தனர். கடந்த 45 நாட்க ளில் 1900 பேரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் ரூ.50 கோடி வரை மோசடி செய்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment