கொடியேற்றம், படத்திறப்பு, கருத்தரங்கம் காலை நிகழ்வு களை கட்டியது
தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை,மே 20- திராவிடர் தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு சென்னை தாம்பரத்தில் இன்று (20.5.2023) காலை தொடங்கி ஒரு நாள் நிகழ்வாக சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது. தாம்பரம் மாநகர் சாலைகளில் இருமருங்கும் கழகக்கொடிகள் அமைக்கப்பட்டு மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களை வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
திராவிடர் தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாட்டின் காலை நிகழ்ச்சிகள் தாம்பரம் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள டிஜிபி திருமண மண்டபத்தில் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலிருந்தே கழகக் குடும்பத்தவர்கள் தமிழ்நாடு முழுவதுமிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரண்டு பங்கேற்றனர்.
தாம்பரம் டிஜிபி திருமண மண்டபத்தில் சுயமரி யாதைச் சுடரொளிகள் திண்டுக்கல் கே.ஜி.சுப்பிரமணி யம்-நாகலிங்கம் நினைவரங்கத்தில் மாநாடு கருத்தரங்கு எழுச்சியுடன் தொடங்கியது. மாநாட்டின் காலை நேர நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், கருஞ்சட் டையினரின் பெருவெள்ளத்தில் அரங்கம் நிறைந்தது. திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.
பகுத்தறிவு கலை நிகழ்ச்சியை திருத்தணி பன்னீர் செல்வம் குழுவினர் வழங்கினர்.
திருத்தணி பன்னீர்செல்வம் உள்ளிட்ட குழுவின ருக்கு பயனாடை அணிவித்து கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்பு செய்தார்.
தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
மாநாட்டின் கருத்தரங்கம் நடைபெறுகின்ற மண்ட பத்துக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை உற்சாகத்துடன் கழகப் பொறுப்பாளர்கள் வரவேற் றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கருத்தரங்க மேடைக்கு அழைக்கப்பட்டார்கள்.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை பொரு ளாளர் மா.இராசு வரவேற்றார்.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை செய லாளர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கொடி ஏற்றி வைத்தார்.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை தலைவர் அ.மோகன் தலைமையேற்று உரையாற்றினார்.
தந்தைபெரியார் படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையாற்றினார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம் கருத்தரங்கத்தில் தொடக்க உரையாற்றினார்.
தமிழர் தலைவர் சிறப்புரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் பயனாடை அணிவித்தார்.
தொமுச சார்பில் அதன் பொறுப்பாளர் நடராஜன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கம்
தொழிலாளியா? பங்காளியா? தலைப்பில் திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன், ஊதி யத்தில் ஆண்-பெண் வேறுபாடு ஏன்? தலைப்பில் திராவிடர் கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தனியார் துறை யிலும் தேவை இடஒதுக்கீடு தலைப்பில் திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, ஒப்பந்தத் தொழிலாளர் முறை நீடிக்கலாமா? தலைப் பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள்.
திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை செய லாளர் குடந்தை க.குருசாமி தலைமையில் தீர் மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக விவசாயத் தொழிலாளரணி மாநில செயலாளர் க.வீரையன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment