சென்னை,மே18 - சென்னையில் இது வரை இல்லாத வகையில் 4,016 மெகா வாட் மின்சாரம் நுகர்ப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
யூனிட் கணக்கில் 16.5.2023 அன்று சென் னையில் 9 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது. சென்னையில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததை அடுத்து மின் நுகர்வு முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதனை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 45 நாட்களில் 19,387 மெகா வாட்டாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீராக மின்விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
சென்னையில் கடந்த 2 நாளில் (மே 15,16) 4,016 மெகா வாட்டாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது. 13 துணை மின் நிலையங்கள் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மின்கட்ட மைப்புக்கு தேவையான பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்களில் கணக்கெடுக்கப்பட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின் சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment