சென்னை,மே31 - ‘‘நிலவுக்கு செல்லும் சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்’’ என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப் 12 ராக்கெட் என்.வி.எஸ்-01 என்கிற வழிகாட்டும் வகை செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர் களிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: இஸ்ரோ மூலமாக ஜி.எஸ்.எல்.வி - எப் 12 ராக்கெட் மிக வெற்றிகரமாக செலுத்தப் பட்டுள்ளது. நாங்கள் திட்டமிடப்படி மிக துல்லிய மாக புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஜி.எஸ்.எல்.வி எப்12 செலுத்தப்பட்டுள்ளது. தற் போது அனுப்பப்பட்டுள்ள என்.வி.எஸ் -01 செயற்கைக்கோள் அடுத்த தலைமுறை தொழில் நுட்பம் கொண்ட நேவிகேஷன் செயற்கைக்கோளாகும். இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம் மற்றும் நேர தகவலை துல்லியமாக வழங்க முடியும். மேலும், என்.வி.எஸ் 01 செயற் கைக்கோள் மூலமாக வரும் தகவல்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மிஷனில் அடுத்தடுத்து இன்னும் 4 செயற்கைக் கோள் களை வெற்றிகரமாக அனுப்பு வோம். இதேபோல, விரைவில் பருவ நிலை மாறுபாடுகள் குறித்து கண்காணிக்க அடுத்த தாக இன்சாட் - 3 டி.எஸ் செயற் கைகோளை அனுப்ப உள்ளோம். வரக்கூடிய மாதங்களில் ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி மார்க் 3, ககன்யான் திட்டம், எஸ்.எஸ்.எல்.வி, உள்ளிட்ட திட்டங்கள் வர உள்ளன. ககன்யான் திட் டத்திற்கு தேவையான பாரா சூட், இருக்கை, மற்றும் பயணி அமைப்பு சோதனையில் உள் ளது. ஜூலை அல்லது ஆகஸ்டில் ஒரு திட்டத்தினை செயல்படுத்த உள்ளோம். மனிதர்கள் இல்லா மல் ஏவும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த உள்ளோம். சந்திராயன்-3 ராக்கெட் ஜூலையில் விண்ணில் ஏவப்படும்.
குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஒத்துழைப்பு
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. சிறிய அளவிலான ராக்கெட் ஏவுதளமாக அது செயல்பட வாய்ப்புள்ளது. குறிப் பாக வணிக ரீதியிலான தனியார் ராக்கெட் செலுத்துவதற்கு எதிர்காலத்தில் பயன்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் 99 சதவீதம் முடிந்து விட்டது. சிறிய அளவிலான இடம் மட் டுமே கையகப்படுத்த வேண்டி யுள்ளது. கட்டுமானப்பணிக் கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளது. கட்டுமான வேலை தொடங்கினால், குறைந்தபட்சம் 2 ஆண்டுகளில் செயல்பட தொடங்கும். இதற்கு தமிழ்நாடு அரசு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என இஸ்ரோ தலைவர் சோம் நாத் தெரிவித்தார்.
'பித்தா பிறை சூடி' என்றால், சிவபெருமான் தலையில் சூடியி ருக்கும் சந்திரன் என்று பொருள். அவன் தலைமீது ராக்கெட் ஏவப் படுகிறது -இப்பொழுதாவது புத்தி வருமா?
No comments:
Post a Comment