இளவட்டக் கல்லும் 39 வயது ராஜகுமாரியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

இளவட்டக் கல்லும் 39 வயது ராஜகுமாரியும்

சிலருக்கு சில காரணங்களால் ஏதே னும் ஒரு வழியில் சமூக நடைமுறைக ளோடும், யதார்த்தத்தோடும் முட்டி மோத வேண்டியிருக்கிறது! பழையதை துடைத்தெறிவது, புதியதை உருவாக் குவது, இழந்ததை மீட்பது தான் அந்த மோதலின் நோக்கம்!

திருநெல்வேலி, ராதாபுரம், வடலி விளை கிராமத்தின், 'இளவட்டக்கல் தூக்கும் போட்டி'யில் வென்றிருக்கும் 39 வயது ராஜகுமாரிக்கும் இந்நோக்கம் உண்டு!

10 - 14 வயதில் அப்பாவுக்கு குடிப் பழக்கம்; அம்மாவோடு சண்டை போட்டு சாப்பாட்டை எல்லாம் தெரு வுல அவர் வீசி எறியுறதால் குடும்பமே பட்டினியால் கிடப்போம்! ஆனா, அந்த மன இறுக்கத்துலேயும் என் வயசு பிள்ளைகளோட ஓட்டப் பந்தயம் விடு றது, கபடி ஆடுறதுன்னு நான் நானா இருப்பேன்!

15 - 17 வயதில் அடிகுழாய் மூலமா தண்ணி அடிச்சு குடம் நிரப்பி, காலையில இருந்து சாயங்காலம் வரை செடி களுக்கு தண்ணி ஊத்தினா 30 ரூபாய் கிடைக்கும்! வேலை இல்லாத நாட்கள்ல தான் பள்ளிக்கூடம் போக விடுவாங்க; இப்படித்தான் 8ஆம் வகுப்பு வரை படிச்சேன்! வேலைக்கு போகாம கபடி ஆடி அம்மாகிட்டே அடி வாங்கினதும் உண்டு!

18 - 23 வயதில் கோவையில 70 ரூபாய் கூலிக்கு ஒரு கயிறு மில்லுல சேர்த்து விட்டாங்க! கஞ்சி குடிச்சுட்டு, வெயில் சுடுற புழுதி மண்ணுல ஆட்டம் போட்டுட்டு இருந்த என்னால அங்கே இருக்க முடியலை! 'மாசத்துக்கு ஒரு தடவை வீட்டு ஆளுகளோட தொலை பேசியில் பேசலாம்'ங்கிற விதி கொடு மையா இருந்தது. விளையாட்டு என் கிட்டே இருந்து விலக ஆரம்பிச்ச தருணம் அது!

24 - 34 வயதில் 'கை, கால் இல்லாம இருந்தாலும் பரவாயில்லை; குடிப்பழக் கம் இருக்கவே கூடாது!' - இதுதான் என் வாழ்க்கைத் துணைக்கு நான் வரை யறுத்த தகுதி. 23 வயசுல கல்யாணம்; ஒரு மகன், 2 மகள். குடும்பப் பொறுப்பு களோட நான் திருப்தியா இருந்த நேரத் துலதான், 'இளவட்டக்கல் தூக்கும் போட்டி'யில முதன்முறையா எங்க ஊர் பெண்களும் கலந்துக்க ஆரம்பிச்சாங்க. மனசுக்குள்ளே, இளவயசு ராஜகுமாரி முழிச்சுக்கிட்டா!

இதற்குப்பின்... 45 கிலோ ஆட்டுக்கல் உரலை ஒரு நிமிடத்தில் 11 முறை தூக் கிப் போட்டது, 60 கிலோ இளவட்டக் கல்லை 11 முறை தலையை சுற்றி தூக்கி போட்டது, கிராம பெண்கள் 2 பேருடன் தெலங்கானா சென்று இளவட்டக்கல் தூக்கி பெருமை பெற்றது என, ராஜ குமாரியின் சாதனைகள் தொடர்கின்றன!

ராஜகுமாரி 39 வயதில் இன்னும் நிறைய ஜெயிக்கணும்னு ஆசையா இருக்கு; இது ஏன்னு தெரியலை!

ஏனெனில்... ராஜகுமாரி போன்றோ ருக்கு, சில காரணங்களால் ஏதேனும் ஒரு வழியில் சமூக நடைமுறைகளோடும், யதார்த்தத்தோடும் முட்டி மோத வேண்டியிருக்கிறது.

ஆசைகள் 1000 இருக்கு எங்க ஊருக்கு மைதானம் வேணும், கார் வாங்கணும், விமானப் பயணம் பண்ணணும் என்று நீண்டு கொண்டே போகிறது.

No comments:

Post a Comment