கோடை கால 380 சிறப்பு ரயில்கள் இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

கோடை கால 380 சிறப்பு ரயில்கள் இயக்கம்

 சென்னை, மே 23   கோடைகாலத்தை முன் னிட்டு இந்திய ரயில்வே நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப் பது பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,``இந்த ஆண்டு கோடை சீசனில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இந்திய ரயில்வே 80 ஆயிரம் பெட்டிகளுடன் 380 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்த ரயில்கள் மூலம் 6369 டிரிப்புகளை இயக்க உள்ளது. கடந்த ஆண்டு 348 சிறப்பு ரயில்கள் மூலம் 4599 டிரிப்புகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 1770 டிரிப்புகளை இயக்க உள்ளது. கடந்த கோடை சீசனில் சராசரியாக ஒரு ரயிலுக்கு 13.2 டிரிப்புகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அது 16.8 டிரிப்புகளாக அதிகரிக்கப்பட் டுள்ளன. இந்த ஆண்டு பாட்னா-செகந்திராபாத், பாட்னா-யஸ்வந்த்பூர், பரௌனி-முசாபூர், டில்லி-பாட்னா, டில்லி-கத்ரா, சண்டிகர்-கோரக்பூர், ஆனந்த்விஹார்-பாட்னா, விசாகபட்டினம்-புரி-ஹவுரா, மும்பை-பாட்னா, மும்பை-கோரக்பூர் டிரிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 380 சிறப்பு ரயில்களில் 25794 பொது பெட்டிகளும், 55243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன. ஜெனரல் கோச்சுகளில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது. அதே சமயம் ஸ்லீப்பர் கோச்சுகளில் 72 பேர் பயணிக்க முடியும். இந்த சிறப்பு ரயில்கள் மூலம் கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராட்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், டில்லி போன்ற மாநிலங்களில் இருந்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது. தேவையின் அடிப்படை யில் ரயில்களின் எண்ணிக்கை மற்றும் டிரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்'' என குறிப்பிடப் பட்டுள்ளது.


பாலியல் வன்முறை செய்தவரைக் கொன்ற பெண்ணின் சிறைத்தண்டனை ரத்து

மெக்சிகோ அரசு உத்தரவு

மெக்சிகோ சிட்டி,மே22- மத்திய அமெரிக்க நாடு களில் ஒன்றான மெக்சிகோவில் கடந்த 2021ஆம் ஆண்டு இளம்பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அந்த இளம் பெண் தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தார். இதனையடுத்து இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் அந்த நாட்டின் நீதிமன்றம் இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.13 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பெண்ணிய குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். அப்போது, `தனது உயிரை பாதுகாப்பது குற்றமல்ல' என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனை ஏற்றுக் கொண்ட மெக்சிகோ அரசு அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment