சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 17-  தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள் நேற்று (16.5.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப் போட்டிக்கு 2022ஆம் ஆண்டில் (01.01.2022 முதல் 31.12.2022 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல் கள் 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படு கின்றன.

போட்டியில் ஒவ்வொரு வகைப் பாட்டிலும் ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரி யருக்கு ரூ.30ஆயிரமும், அந் நூலைப் பதிப்பித்த பதிப்பகத் தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிக்குரிய விண்ணப்பம் -_ விதிமுறைகளை தமிழ்வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் (https:tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்துடன் 10 நூற்படிகள், போட்டி கட்டணம் ரூ.100-அய் (“தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) "தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை 600 008" என்ற முகவரிக்கு ஜுன் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண் டும்.  கூடுதல் விவரங்களுக்கு 044 - _ 28190412, 28190413 ஆகிய தொலைப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment