காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை, மே 22 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஒரு துக்ளக் தர்பாரை ஆரம்பித்து வைத்து இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேனாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 32ஆவது நினைவு தினம் நேற்று (21.5.2023) கடைப் பிடிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அவரது படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவ ரின் படத்திற்கு தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:
பிரதமர் மோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றிருக்கிறார். திரும்பவும் ஒரு துக்ளக் தர்பாரை அவர் ஆரம்பித்து வைத்து இருக்கிறார். ஏற்கெனவே நாணய மதிப்பிழப்பை கொண்டு வந்தார். அதனால் என்ன பயன் கிடைத்தது என்று அவருக்கும் தெரியாது. நாட்டு மக்களுக்கும் தெரியாது. இன்றைக்கு மீண்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மறைந்து போய் இருக்கிறது. ஒரு அரசாங்கம் என்பது ஒரு திட்டத்தை அறிவித்தால், அந்த திட்டம் எதற் காக அறிவிக்கப்பட்டது. அதனால் மக்களுக்கு என்ன கிடைக்கும்.
அரசின் கொள்கை என்ன என்பதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால், பிரதமர் மோடி வாய் திறப்பதே இல்லை. எதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட் டுக்களை கொண்டு வந்தார்கள். எதற்காக இன்றைக்கு அவர்கள் திரும்ப பெற்றிருக்கிறார்கள் என் பதை அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லாததும் நல்லது தான்.
ஏனென்றால் அவர்களின் புதைக்குழியை அவர்களே தோண் டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment