வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

சென்னை, மே 25- தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுத லின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 23.5.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் வளரிளம் பருவத்தினருக் கான 25,000 விழிப் புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும் வகையில் சென்னை, சைதாப்பேட்டை, பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் ஆற்றிய உரை வருமாறு:

கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது. அந்த நிதி நிலை அறிக்கையில் துறைகள் வாரியாக இந்த ஆண்டு முழுவதும் செயல்படுத்திட வேண்டிய திட்டங்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முதலாம் ஆண்டில் 110 அறிவிப்புகளும், இரண்டாம் ஆண்டில் 136 அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. 

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 106 அறிவிப் புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான அறிவிப்பாக வள ரிளம் பருவத்தினர் நல்வாழ்வை மேம் படுத்திடும் வகையில் 25,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழு வதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முகாம் என்கிற வகையில் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டது. 

அதன்படி இன்று (23.5.2023) சைதாப்பேட்டை, பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 500 பள்ளி மாணவ, மாண வியர்களுக்கு இச்சிறப்பு மருத் துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த முகாம்களில் 10 முதல் 19 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத் தினரான மாணவ, மாணவியருக்கு சுகா தார ஆலோசனைகள், விழிப்புணர்வு மற்றும் இரத்த சோகைக்கான பரிசோ தனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு பரிசோத னைகளும் மேற்கொள்ளப் படும்.

தமிழ்நாட்டில் இரத்த சோகை பாதிப்பைப் பொறுத்தவரை வளரிளம் பெண்களுக்கு 52.9%, வளரிளம் ஆண்க ளுக்கு 24.6% கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் இரத்த சோகை பாதிக்கப் பட்ட வளரிளம் பருவத்தினர்களை கண்டறிந்து 20 வகையான சிறப்பு மருத் துவ சிகிச்சை வழங்குவதுடன் இரத்த சோகை இல்லா தமிழ்நாடாக மாற்று வதே இச்சிறப்பு முகாமின் நோக்க மாகும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முகாம் வீதம் 25,524 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.2 கோடி வளரிளம் பருவத்தினர் பயனடைவார்கள். இதில் பள்ளி மற்றும் பள்ளி செல்லா வளரிளம் பருவத்தினரும் அடங்குவர். 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுத லின்படி இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இந்த துறையில் முதலாம் ஆண்டு வருமுன் காப்போம் என்ற திட்டம், ஒன் றியத்திற்கு 3 மருத்துவ முகாம் கள், ஒவ்வொரு மாநகராட்சிக்கும் 4 முகாம்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங் களுக்கு 15 முகாம்கள் என 1,250 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 1,260 முகாம்கள் முதலாம் ஆண்டு நடத்தப்பட்டது. 

அதே போல் கடந்த ஆண்டு 1,250 நடத் தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 1,532 முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பொது மக்கள் பயனடைந்துள்ளனர். 

முன்னோடி திட்டங்கள் 

2006-ஆம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, பீகாரில் சானிடரி நாப்கினாக மிகவும் அழுக் கான துணிகளையும், கோணிப்பை களையும் பயன்படுத்தியதால் 4 இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்கள் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

அப்போது நடைபெற்ற பட்ஜட் மீதான விவாதத்தில் நான் மேயராக பொறுப்பேற்றிருந்த அந்த சமயத்தில், தற்போதைய முதலமைச்சர் அந்த நேரத்தில் துணை முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய அறிவுறுத் தலை பெற்று 65 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இலவசமாக சானிடரி நாப்கின் கொடுக்கும் திட்டம் கொண்டு வரலாம் என்று யோசனையை தெரிவித்தேன்.

ஆனால் இது மிகவும் உணர்ச்சிப் பூர்வமான விஷயம் என்பதால் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த திட்டத்தை அன்றைய துணை முதலமைச்சர் அவர் களின் கவனத்திற்கு உயர் அதிகாரிகள் கொண்டு சென்றனர். உடனடியாக இந்த திட்டத்திற்கு அன்றைய துணை முதலமைச்சர் அனுமதி தந்து கொண்டு வரச் சொன்னார்கள். 

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகராட்சி சார்பில் இந்தத் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தோம். 

தமிழ்நாடு முதலமைச்சரின் வழி காட்டுதலின்படி, மக்களுக்கு தேவை யான முன்னோடியான திட்டங்களை கொண்டு வரும் வகையில், இன்று வளரிளம் பருவத்தினருக்கு விழிப் புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தை மாணவ மாண விகள் பின் பற்றும் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னி லையில் மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 3 மாதங் களுக்கு முன்னால் ஊட்டியில் இரும்புச் சத்து மாத்தி ரைகளை அதிக அள வில் ஒரு மாணவி எடுத்துக்கொண்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

எனவே ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்கள் மருத்து வர்கள் வழிகாட்டு தலின்படி மாத்திரைகளை மிக கவனமாக உட்கொள்ள வேண்டும்.

-இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment