நெல்லை, மே 15 தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்வியாண் டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியா னது. இதையடுத்து அன்றைய தினமே தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி களில் இளநிலைப் படிப்புக ளுக்கு சேர்க்கை விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள 164 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலைப்பட்ட படிப்புகளுக் கான இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மாண வர் சேர்க்கை பதிவுwww.tngasa.in என்ற இணையதள முக வரியில் தொடங்கியது. தனி யார் கல்லூரிகளைவிட அரசு கல்லூரிகளில் கட்டணம் மிக வும் குறைவு என்பதால் பலர் அரசுக்கல்லூரிகளில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு அர சுக்கல்லூரிகளில் புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாலும் மாணவி கள் அதிக ஆர்வம் காட்டுகின் றனர். இதனால் ஆன்லைன் விண்ணப்பங்கள் குவிந்துள் ளன. இதையடுத்து சேர்க்கை கலந்தாய்வு வருகிற 25ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 10 தினங்களுக்குள் சேர்க்கைப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான 25ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந் தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து அந்தந்த கல்லூரி களில் உள்ள பாடத்திட்டங் களுக்கு ஏற்ப கலந்தாய்வு அர சின் வழிகாட்டுதல் நெறிமு றைப்படி நடைபெற உள்ளது. நெல்லையில் பழமைவாய்ந்த ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 15 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இதில் பயில 1,176 இடங்கள் உள்ள நிலையில் ஆயிரக்கணக் கான விண்ணப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment