மே 2 முதல் 6 வரை திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற வெற்றிகரமான 25ஆவது ஆண்டு பெரியார் பிஞ்சு பழகுமுகாமில் எனது மகன் ஆனந்த பிரபாகரன் கலந்து கொண்டார். 74 (36 பெண் குழந்தைகள், 38ஆண் குழந்தைகள்) குழந்தைகள் கலந்து கொண்ட self development நிகழ்வில் குழந்தை களுக்கு தினமும் காலை 5 மணிக்கு மெல்லோட்டத்தில் தொடங்கி , நீச்சல், சிலம்பம், காரத்தே, ஏரோபிக்ஸ் முதலிய உடற்பயிற்சிகளும், சிந்தனையை தூண்டும் வகையில் டெலஸ்கோப் வைத்து அதன் பயன்பாடு, கையில் கட்டியுள்ள கயிறுகளில் உள்ள பாக்டீரியாக்களை மைக்ராஸ் கோப் மூலம் குழந்தைகளுக்கு காண்பித்து, இரத்த வகைகளை குழந்தைகளிடம் எப்படி கண்டுபிடிக் கப்படுகிறது என நேரடியாக செய்து காட்டியும், அறிவியல் ஆய்வாளர்களை கொண்டு அறிவியல் ரீதியாக பல உண்மைகளை நேரடியாக விளக்கி காட்டப்பட்டது.
மந்திரமா?தந்திரமா நிகழ்ச்சி மூலம் மூட நம்பிக்கை குறித்து விளக்கப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் நன்கு உணரும் வகையில் பெரியாரியல் கருத்துகள் குழந்தைகள் மனதில் விதைக்கப்பட்டது. குழந்தைகளுடன் கவிஞர் கலி.பூங்குன்றன் தங்கி கலந்துரையாடினார்.
இறுதிநாளில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
இறுதிநாள் நிகழ்ச்சியில் அதிரடி அன்பழகன் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சிகளையும், குழந்தைகள், தங்குவதற்கு, சிறப்பான தங்குமிடம், அறுசுவை உணவுகளை வழங்கி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும், துணை வேந்தர், முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் வாலண்டியர்களுக்கும், குழந்தைகள் வீட்டிற்கு வரமுடியாது என அடம் பிடிக்கும் வகையில் தங்கள் குழந்தைகள் போல் நடத்திய அனுஷா மேடம், சித்ரா மேடம் அவர் களுக்கும், கலைவாணன் அவர்களுக்கும், றிஸிளி அவர்களுக்கும், பெரியார் திடல் பவானி அவர்களுக்கும் குழந்தைகளின் நண்பன் முகாமை சிறப்பாக வழி நடத்திய பெயருக்கு ஏற்றபடியே இளவரசரான பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கும், குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறிய உடுமலை வடிவேல் அவர்களுக்கும், சிறப் பாக ஏற்பாடு செய்த திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும் பெரியார் பிஞ்சுகளின் சார்பாக இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க பெரியார்! வெல்லட்டும் திராவிடமாடல்!
நன்றியுடன்
வழக்குரைஞர் மு.தம்பித்துரை
மதுரை.
No comments:
Post a Comment