சென்னை, மே 18 - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியாக திமுக ஆட்சி மலர்ந்து சாதனை தொடரும் நிலையில், கடந்த இரண்டாண்டில் தமிழ்நாட் டின் பொருளாதாரம், நிதி நிலை ஆகிய அனைத்தும் மிகப் பெரிய மாற்றத்தையும் வளர்ச்சி யையும் பதிவு செய்துள்ளது.
கடன் அளவை குறைத்தது முதல் தனி நபர் வருமானத்தில் பதிவான உயர்வு வரையில் பல இடத்தில் நிதியியல் அடிப்படை யில் தமிழ்நாடு முன்னேறியுள் ளது. இந்நிலையில் தமிழ்நாட் டின் நிதிநிலை குறித்து தணிக் கைத்துறை (சிஏஜி) அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
2022-2023ஆம் நிதியாண் டில் தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் 17.54 சதவீதம் அதிகரித் துள்ளது என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கை யாளர் (சிஏஜி) வெளியிட்ட தரவுகளில் தெரிவித்துள்ளன. 2021_-2022ஆம் நிதியாண்டில் பதிவான தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ.2.08 லட்சம் கோடியில் இருந்து 2022-_2023ஆம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.2.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரூ.2.42 லட்சம் கோடி மொத்த வருவாயில், வரி வரு வாய் அளவு 17.85% அதிகரித்துள் ளது, தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி அளவு 18.88% அதிகரித்துள் ளது, மதுபானம் மற்றும் எரி பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருவாய் 21.52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 2022 நிதிநிலை அறிக்கையின் படி குறிப்பிடப்பட்ட வருவாய் இலக்குகளை 108.59% தாண்டி யது.
கடந்த ஆண்டுதான் கரோனா தொற்று இல்லாத முதல் ஆண்டு என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களின் நிதியியல் அளவுகள் வளர்ச்சி பாதையில் உள்ளது. 2021--2022 ஆம் நிதியாண்டில் கரோனா காரணமாக தமிழ்நாடு அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப் பட்டது, இதேபோல் ரேஷன் கார்டு அடிப்படையில் மக்க ளுக்கு 4000 ரூபாய் அளிக்கப் பட்டது. இது வருவாய் மற்றும் செலவுகள் அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் 2022--2023ஆம் நிதி யாண்டில் இதுபோன்ற பிரச் சினைகள் எதுவும் எழவில்லை, இதனால் 56,479 கோடி ரூபாய் மதிப்பிலான செலவுகள் திட் டத்திற்கு, தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 27,549 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
No comments:
Post a Comment