சென்னை, மே 19 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத விண் ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நிகழாண்டில் 8,03,385 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.03 சதவீத தேர்ச்சியாகும். இந்தத் தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர் களுக்கு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வுகள் ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதிவரை நடக்கிறது. இதற்குத் தனித் தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கடந்த 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து தட்கல் முறையிலான விண்ணப்பப் பதிவு நேற்று (18.5.2023) வியாழக்கிழமை முதல் தொடங்க இருந்தது. இந்தநிலையில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் நலன்கருதி, விண்ணப்பிக்கும் கால அளவு வரும் மே 23-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைத் தவற விடும் மாணவர்கள் தட்கல் முறையில் மே 24 முதல் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையிலான விண்ணப்பத்திற்கு தேர்வுக் கட்டணத்துடன் 1000 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment