அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2.3 லட்சம் மாணவர்கள் சேர விண்ணப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2.3 லட்சம் மாணவர்கள் சேர விண்ணப்பம்

சென்னை, மே 18  தமிழ்நாட்டில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வ முடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 37,985 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட் சத்து 85,009 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 

இந்நிலையில் விண்ணப்பப் பதிவுக் கான கால அவகாசம் நாளையுடன் (மே 19) நிறைவு பெறுகிறது. எனவே, விருப் பமுள்ளவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டி யல் மே 23-ஆம் தேதிக்குள் கல்லூரி களுக்கு அனுப்பப்படும்.

அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும். தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment