சென்னை,மே15 - அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேச கடற்கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசி யது. தற்போது, சிட்வேக்கு வடக்கே சுமார் 40கி.மீ., தொலை விலும், காக்ஸ் பஜாருக்கு தென் கிழக்கே 145 கி.மீ., தொலைவிலும் மோக்கா நிலைகொண்டுள்ளது.
அடுத்து அதி தீவிர மோக்கா புயல் வலுவிழக்கும் என வானிலை மய்யம் கூறியுள்ளது. கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதாக வானிலை மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மய்யம் கூறியுள்ளது.
நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சம் வெப்பநிலை 28-_29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment