சென்னை, மே 28 - தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவை கடந்த மே 8ம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் ஆ.பொன்முடி தொடங்கி வைத் தார்.
http://www.tngasa.in/ எனும் இணைய தளம் வழியாக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர். மே 19ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக இருந்த விண் ணப்ப பதிவை, மாணவர்கள் நலன்கருதி மே 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, 3 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள் ளனர். அதிக அளவிலான விண் ணப்பங்களை பெற்று சென்னை மாநிலக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத் தில் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியும், 3ஆம் இடத்தில் சென்னை, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியும் உள்ளன.
இதுகுறித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் கூறியதாவது:
ஒரு மாணவன் ஒரே கல்லூரியில் பல படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு செய்வார். அதன்படி, 1,140 இடங்களுக்கு கடந்த ஆண்டு மாநில கல்லூரிக்கு 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. இந்த ஆண்டு 1,20,304 விண்ணப் பங்கள் வந்துள்ளன.
இது தமிழ்நாட்டில் வேறு எந்த அரசு கல்லூரிக்கும் வராத எண் ணிக்கையிலான விண்ணப்பங்கள். கடந்த ஆண்டைவிட கூடுதலாக 25,000 விண்ணப்பங்கள் மாநிலக் கல்லூரிக்கு வந்துள்ளன.
ஒரு இடத்திற்கு 106 பேர் போட்டியிட்டுள்ளனர். பி.காம் மற்றும் வேதியியல் படிப்பிற்கு அதிக அளவிலான விண்ணப் பங்கள் வந்துள்ளன. தமிழ் துறைக்கு 9 ஆயிரம் விண்ணப் பங்கள் வந்துள்ளன. இதற்கு காரணம், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தான். தமிழ்மொழிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த துறைக்கு தற்போது மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு தமிழ்ப் பேராசிரியராக எனக்கும் இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக் கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டும்
பி.காம் (பொது), பி.எஸ்சி, கம்ப் யூட்டர் படிப்பிற்கே மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள் ளனர். இதை தொடர்ந்து, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும், முதல் பொது கலந் தாய்வு ஜூன் 1ஆம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், இரண்டாம் பொது கலந்தாய்வு ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலும் நடக்கிறது.
தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி தொடங்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment