லக்னோ, மே 28 - உத்தரப் பிரதேசத்தில் 2017-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. கோரக் பூர் மடாதிபதியும், இந்துத்துவா சாமி யாருமான ஆதித்யநாத் முதலமைச்சரானார். 2022இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையா கவும் ஆதித்யநாத் முதலமைச்ச ரானார்.
6 ஆண்டுகளாக முதலமைச்ச ராக இருக்கிறார். இந்நிலையில் தான், ஆதித்ய நாத்தின் இந்த 6 ஆண்டு ஆட்சியில், 186 பேர் எந்த விசாரணையும் இல்லாமல், கண் மூடித்தனமாக என்கவுண்ட்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக 15 நாட்களுக்கு ஒருவர், உ.பி. காவல்துறையால் சுட்டுக் கொல் லப்பட்டு உள்ளார். உத்தரப் பிர தேச காவல்துறையிடம் பதிவான அதிகாரப்பூர்வ என்கவுண்ட்டர் புள்ளி விவரங்களை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு, புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நன்தன்பூர் பகுதியைச் சேர்ந்த குர் மீட் என்பவர்தான், ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு என்கவுண்ட் டரில் கொலை செய்யப்பட்ட முதல் நபர். இச்சம்பவம் 2017, மார்ச் 31 அன்று நடை பெற்றது. கடைசியாக கடந்த மே 14 அன்று உமேஷ் சந்திரா (27), ரமேஷ் (40) ஆகியோர் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.
இவ்வாறு 2017 மார்ச் மாதம் துவங்கி தற்போது வரை 186 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு உள்ளனர். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒருவர் காவல்துறையால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுல்ல, படுகொலைகள் தவிர, 5,046 பேர் காலில் சுடப்பட்டு காயமடைந்துள்ளனர். இதனைப் பொறுத்த வரை, சராசரியாக 15 நாட்களுக்கு ஒரு முறை 30-க்கும் மேற்பட்ட நபர்கள் காவல்துறையினரால் காலில் சுடப்பட்டுள் ளனர்.
இவ்வாறு உ.பி. காவல் துறை யால் சுட்டுக்கொல்லப்பட்ட 186 பேர்களில் 96 குற்றவாளிகள் கொலை குற்றம் செய்தவர்கள், 2 பேர் பாலியல் வன்கொடுமை, கும் பல் பாலியல் வன்கொடுமை மற் றும் போக்சோ குற்றம் செய்தவர் கள் என்று கூறப்படுகிறது.
பொதுவாக தங்களின் என்கவுண்ட்டர் கொலைகளுக்கு முன்கூட்டியே காரணத்தை உரு வாக்குவது காவல்துறையினரின் வழக்கம். எனவே, கொலை செய் தார்கள், கொள்ளை அடித்தார் கள், வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபட் டார்கள் என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இந்த என்கவுண்ட்டர்களை யொட்டி, மேற்கொள்ளப் பட வேண்டிய முறையான விசாரணை கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதுதான், உ.பி. காவல் துறை மீது சந்தேகத்தை வரவழைக்கிறது.
ஒருவர் குற்றவாளியே ஆனா லும், அவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்படும் பட்சத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை நடை பெறும். அனைத்து என்கவுண்ட் டர்களுக்கும் இது பொருந்தும். ஆனால், 186 என்கவுண்ட்டரில் 161 என்கவுண்ட்டர் மரணங்கள் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று முடிந் தும், இந்த விசாரணைகளின்போது, எந்த எதிர் கேள்வியும் அல்லது என்கவுண்ட்டர் தொடர்பான எந்த மறுப்பும் பதிவு செய்யப் படவில்லை என்பது அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது.
அதுமட்டுமன்றி, 186 என் கவுண்ட்டர் களில் 156 வழக்குகளை முடித்து வைக்கும் அறிக்கை காவல்துறையினரால் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 141 என்கவுண்ட்டர் வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைக்க ஒப்புக்கொண்டுள்ளது.
15 வழக்குகள் மட்டுமே நிலுவை யில் உள்ளன. என்கவுண்ட்டர் படுகொலைகளில், மீரட் பகுதி யைச் சேர்ந்த காவல்துறையினர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அவர்கள் 65 பேரை என் கவுண்ட்டர் செய்துள்ளனர்.
வாரணாசி காவல்துறையினர் 20 மற்றும் ஆக்ரா காவல்துறையினர் 14 என என்கவுண்ட்டர்களை அரங்கேற்றியுள்ளனர்.
‘ஆப்ரேஷன் லங்கடா’ என்ற காவல்துறை நடவடிக்கையில் 2017 மார்ச் முதல் 2023 ஏப்ரல் வரை 5,046 பேர் காலில் சுடப் பட்டுள்ளனர். இதிலும் மீரட் பகுதிதான் முதல் இடத்தில் உள் ளது. இந்த பகுதியில் 1,752 தேடப் பட்ட குற்றவாளிகள் காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளனர்.
மீரட் பகுதி காவல்துறையினர் மட்டும் அதிகமான என்கவுண்ட் டர்களை நடத்துகிறார்களே அது ஏன்? என்ற கேள்விக்கு, “மேற்கு உத்தரப்பிரதேசம் எப்போ துமே குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதியாகும்” என்று உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்பு காவல்துறை தலைமை இயக்குநர் பிரஷாந்த் குமார் பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment