ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறல் காங்கிரஸ் கட்சி விமர்சனம்

புதுடில்லி, மே 21- ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறல் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன.

இது, தன்னைத்தானே 'விஸ்வகுரு' என்று சொல்லிக் கொள்பவரின் வழக்கமான பாணி. 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ''2ஆவது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்'' என்று வர்ணித்துள்ளார்.

No comments:

Post a Comment