பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை, மே 23- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 19-ஆம் தேதி வெளியானது. ஏப் ரல் மாதத்தில் நடை பெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட் சம் மாணவர்கள் எழுதி யிருந்தனர்.

தேர்வு எழுதிய 9,14,320 பேர்களில் 4,55,017 மாணவிகளும், 4,59,303 மாணவர்களும் ஆவர். இதில் 8,35,614 பேர் வெற்றி பெற்றனர். அதில் 4,04,904 மாணவர்களும், 4,30,710 மாணவிகளும் ஆவர்.10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்க ளும் தேர்ச்சி பெற்றனர். 

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாண வர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்க கம் அறிவித்துள்ளது. அதன் படி, 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக் கலாம். 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாண வர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே போல இந்த கல்வி ஆண் டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11ஆம் தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று (மே 23) முதல் துணைத்தேர் வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக் ககம் அறிவித்துள்ளது.

மேலும், தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே 31 வரையும் விண்ணப் பிக்கலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. 

மேலும், விவரங்களுக்கு  dge.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment