முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,மே4- அண்ணா பல் கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 161 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (3.5.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் உயர்கல் வியை மேம்படுத்தும் வகையில், அதிக உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய வற்றில் மாணவர்களின் திறன் களை வளர்த்து, வேலைவாய்ப்பை உறுதி செய்வது, தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உரு வாக்குவது ஆகிய பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவது, காலிப் பணி இடங்களை நிரப்புவது போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம் பேட்டை எம்அய்டி கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில் நுட்ப கல்லூரி, கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய 4 கல்லூரிகளிலும் உதவி பேரா சிரியர், இணை பேராசிரியர், பேரா சிரியர், உடற்கல்வி துணை இயக் குநர், துணை நூலகர் உள்ளிட்ட பணிகள் காலியாக இருந்தன.
இந்நிலையில், இப்பணியிடங் களுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் தேர் வுக் குழுக்களால் தேர்வு செய்யப் பட்ட 161 பேருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு ஏப்.20-ஆம் தேதி ஒப்புதல் அளித் துள்ளது. தேர்வு செய்யப்பட்ட 161 பேருக்கு நியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.4.2023) வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத் தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன், கூடுதல் செயலர் எஸ்.பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பணியமர்த்தல் பிரிவு இயக்குநர் ஜெ.பிரகாஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment